Home » ஒரு வேளை உணவு, உயிருள்ளவரை முருகன்
ஆன்மிகம்

ஒரு வேளை உணவு, உயிருள்ளவரை முருகன்

ராமேஸ்வரத்துக்குப் போகிறவர்கள் ராமனையும் சிவனையும் கும்பிட்டுவிட்டு, இருந்தால் சில நீத்தார் கடன்களை பைசல் செய்துவிட்டு,  தனுஷ்கோடி முனையில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவதே உலக வழக்கம். இன்னும் இருக்கிறது அங்கே. பார்க்கவும் படிக்கவும் உணரவும் அனுபவிக்கவும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

உதாரணத்துக்கு, பாம்பன் பாலத்தில் சரியான இடத்தில் நின்று கொண்டுதான் பாம்பன் சுவாமிகள் வீட்டை விசாரித்தோம். பாம்பனுக்கு வந்த சோதனையா சுவாமிகளுக்கு வந்த சோதனையா என்று தெரியாது… யாருக்கும் தெரியவில்லை. வீடு இல்லை, கோயில் தான் இருக்கிறது என்று வந்த வழியைக் காட்டினார்கள். அங்கே சென்றால் அது அவர் வழிபட்ட முருகன் கோயில். கோயில் பூசாரி, பாம்பன் சுவாமிகள் வீட்டிற்குச் சரியாக வழி சொன்னார். பழைய இடத்திற்கு வந்து அங்கேயே காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். சிறிய பாதை. வளைந்து வளைந்து முட்டுச் சந்துகளாகச் சென்றன. எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்தால் வீடு பூட்டி இருந்தது. நின்று பார்த்துவிட்டுப் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோம். அடுத்து பிரப்பன் வலசை நோக்கிப் புறப்பட்டோம்.

1850-ஆம் ஆண்டு பாம்பன் தீவில் பிறந்ததால் பாம்பன் சுவாமிகள் என அழைக்கப்படுகிறார். அப்பாவு என்பது இயற்பெயர்.

ராமேஸ்வரத்திற்கு இன்றும் தமிழர்களை விட வட இந்தியர்கள் வருகைதான் அதிகம். இவர் அக்காலத்தில் சிறுவயதிலேயே வட மொழியை நன்கு பயின்றிருக்கிறார். தமிழும் ஆங்கிலமும் தண்ணீர் போல் சரளம். அதிலும் முருகக் குழந்தையின் தமிழ்த் தரம் உங்கள் யூகத்திற்கே.

பெரும்படைப்பாளிகள் பொதுவாகப் பதின்மூன்று வயதிற்குள் வெளிப்பட்டு விடுவார்கள். அப்படித்தான் பாம்பன் சுவாமிகளும். பனை ஓலையில் எழுத ஆரம்பித்திருக்கிறார். நூறு நாட்களுக்கு மதிய உணவுக்கு முன் ஒவ்வொரு நாளும் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். தனது மானசீகக் குருவான அருணகிரிநாதர்  பெயரில் அவற்றை முடித்திருக்கிறார். கண்ட டைந்ததன் முடிவில் 6666 பாடல்கள் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடி இருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!