Home » ஓ, என்னருமைக் குட்டைப் பாவாடையே!
விளையாட்டு

ஓ, என்னருமைக் குட்டைப் பாவாடையே!

லீலா

எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நம் ஊரில் டென்னிஸ் பார்க்கிறவர்கள் அதிகம். விம்பிள்டன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன் என்று எங்கே எதை ஓப்பன் செய்தாலும் உட்கார்ந்துவிடுவோம். அவ்வளவு ஆர்வம் அதிலுண்டு. ஆனால் உலக அளவில் ஜொலிக்க ஒரு டென்னிஸ் நட்சத்திரத்தை ஏன் நாம் உருவாக்கவேயில்லை? குறிப்பாகப் பெண்கள் டென்னிஸ். என்னைக் கேட்டால் ஆண்கள் டென்னிஸுக்குத் தடையே விதித்துவிடலாம். பார்க்கப் பார்க்க, பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஆட்டம் போலத்தான் அது தெரியும்.

பறந்து பறந்து அடிப்பார்கள். குதித்துக் குதித்து அடிப்பார்கள். ஆனாலும் அந்தக் குட்டைப் பாவாடை துளியும் விலகி ஆபாசமாகாது. எந்த கெட்ட பார்வையாளருக்கும் விருந்தாகாது. அந்த லாகவத்திற்கு எத்தனை பயிற்சி பெற்றிருப்பார்கள்..? பாவாடையானது கிழித்த கோட்டில் நிற்கும். அந்தக் கடுப்பில் பந்தையும் ஆட்டத்தையும் தவறி எப்போதாவது கவனித்தால்தான் உண்டு. ஆனாலும் கண்களின் குவியப் புள்ளி குட்டைப் பாவாடையை விட்டு அகலாது. இதில் ஆண் பெண் பேதமே கிடையாது. எல்லோருடைய பார்வையும் அதில்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1875-ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பினர்தான் இந்த ஆட்டத்திற்கான வரையறையை வகுத்தார்கள். ஆனால் இந்தப் பாவாடைக்கான வரையறையை வகுத்தவர்தான் ஆகப்பெரும் விஞ்ஞானி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!