பலமான பொருளாதாரப் பின்னணி இல்லை. தொழில் துறை பற்றிய அறிமுகமோ அனுபவமோ இல்லை. தங்களுக்கிருந்த மென்பொறியாளர் வேலையையும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தாகி விட்டது. கடனின் கையைப் பற்றிக் கொண்டுதான் தங்கள் கனவுகளை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்கள் மகேஷ் குமார் – ரம்யா தம்பதி. தொலைநோக்குப் பார்வை...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
திவ்யா சத்யராஜ், இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்களுள் ஒருவர். இந்தத் துறை சார்ந்து குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். இவரால் தொடங்கப்பட்ட மகிழ்மதி இயக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதமாகச் செயல்பட்டுவருகிறது...
குறைந்தபட்சம் ஐம்பத்தெட்டு வயது. அதிகம் போனால் அறுபது. ஓய்வு பெற்றுவிட்டதாக ஊருக்கு அறிவித்துவிட்டுக் கோயில் குளம் என்று சுற்றிக்கொண்டிருந்த தலைமுறை சில காலம் முன்னர் வரை இருந்தது. இன்று நிலைமை வேறு. முப்பது முப்பத்தைந்தில் வேலையை விட்டுவிடத் துடிக்கிறது இன்றைய தலைமுறை. இன்றைய இளைஞர்கள் –...
இரண்டாயிரமாவது ஆண்டில் சென்னையில் ஒரு சிறிய கடையாகத் தொடங்கப்பட்டதுதான் நேச்சுரல்ஸ் அழகு நிலையம். இருபத்தியிரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இருபது மாநிலங்களில் எழுநூறுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு விரிந்திருக்கிறது. அழகு நிலையங்கள் மட்டுமில்லாமல், உடறபயிற்சி நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன...
பிரிட்டானியா பிஸ்கட் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்நிறுவனத்தில் ஒரு ஜூனியர் ஆஃபீசராகச் சேர்ந்து அதே நிறுவனத்தில் ஒரு தொழிற்சாலைப் பிரிவின் தலைவர் என்ற உயரத்தை எட்டி பிடித்தவர் அரசு கேசவன். எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர் தான். ஆனால் தன்னுடைய தலைமைத்துவப் பண்புகள் மூலம் அவர்...
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 1973 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. அக்கல்லுரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் மதன் சங்கர். இன்று அதே கல்லூரியில் முதன்மையர் (டீன் – அகாடெமிக்ஸ்) ஆக இருக்கிறார். இவர் தன்னுடைய இருபத்தியிரண்டாண்டு அனுபவத்தில் வெவ்வேறு...
தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது தந்தையால் தேனியில் தொடங்கப்பட்ட தன்வந்திரி வைத்தியசாலை இன்று சென்னை, திருவண்ணாமலை, மதுரை நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்த...
SREC எனப்படும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று நான்காமாண்டு தொடங்கப்பட்ட சுயாட்சிப் பொறியியல் கல்லூரி. பன்னிரண்டு இளங்கலை படிப்புகளையும் ஏழு முதுகலை படிப்புகளையும் கல்லூரி வழங்குகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், அக்கல்லுரியின் முதல்வராக இருக்கும் முனைவர் என்.ஆர்...
புத்தகங்கள் ஒருவரது வாழ்க்கையை என்ன செய்யும்? அதிகம் சிரமப்பட வேண்டாம். சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸுக்குச் சென்று வேடியப்பனைச் சந்தியுங்கள். வாசிப்பையும் வாழ்வையும் பிரிக்க முடியாதவர்களின் வளர்ச்சி எவ்வளவு வண்ணமயமாக இருக்கும் என்று கண்கூடாகத் தெரியும். சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தவர்...
பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...