இருபது வருட இடைவெளிக்குப் பிறகு 2021-ல் தாலிபன் அமைப்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 1996-லிருந்து 2001 வரை முதன்முறை அதிகாரத்தில் இருந்த போது சாதிக்க முடியாததை எல்லாம் இந்த முறை ஆட்சிக்கு வந்தபிறகு தீவிரமாகச்...
Author - கோகிலா
பதிநான்காயிரம் கோடிகள். தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்து தன் பெயரை எசுவாடினி என்று மாற்றிக்கொள்ளச் செலவான தொகையை வைத்து இந்தியாவுக்குச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்ட தொகை இது. ஏழைகள் நிறைந்த மத்திய வருவாய் நாடு எசுவாடினி. வளரும் நாடுகளோ அல்லது வளர்ந்த நாடுகளோ இப்படிப் பெயரை மாற்றிக் கொள்ளும்...
2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முஃப்தி முகமத் சையித் வென்றது 28 இடங்கள். பி.ஜே.பி. வென்றது 25 இடங்கள். பி.ஜே.பி.க்கு துணை முதல்வர் பதவியளித்து முஃப்தி முகமது சையித் முதல்வரானார். சில மாதங்கள் பேச்சு வார்த்தை நடந்து அடுத்த வருடம்தான் பதவியேற்பு நடந்தது. அவர் இறப்புக்குப் பிறகு அவர் மகள் மெஹபூபா...
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பேரன் ராகுல் காந்தியின் வயது 14. அடுத்த ஆறு ஆண்டுகளில் ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இருபது வயது இளைஞன் ராகுலுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். தன் அன்புக்குரிய பாட்டியையும் தந்தையும் இழக்கக் காரணமான, தனக்கும் தன் தாய்க்கும் விருப்பமில்லாத...
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 36 கட்சிகள் இருக்கின்றன. தோராயமாக என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். சிலர் வருவதும் போவதுமாக இருப்பதால் எண்ணிக்கை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். 36 என்ற எண்ணைப் பார்த்ததும் இது ஒரு பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணி என்று தோன்றினால் அது தவறு. 36...
திமுக உறுப்பினர் சிவா மக்களவையில் பேசும்போது உப்புமாக் கதை ஒன்றைக் குறிப்பிட்டார். உப்புமா வேண்டாம் என்று சொல்லிய கல்லூரி மாணவர்களிடம் என்ன வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தினார்களாம். பெரும்பான்மை வாக்குகள், பூரி, இட்லி, மசாலா தோசை, ஆம்லெட் என்று பல உணவுகளுக்குப் பிரிந்து விழுந்ததால் யாரும்...
அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல அமெரிக்க ரிட்டர்ன் அரசியல் வாரிசுகளும் சினிமாக்களில் பிரபலம். ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அப்படி ஒருவர். நீண்டகால முதல்வர்கள் வரிசையில் ஜோதிபாசுவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். முதலிடமும் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. ஒரு...
பன்னிரண்டு வயதான பாலஸ்தீனச் சிறுவன் சுலைமான் தன்னுடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தான். தலைபோகும் அவசரம் ஒன்றும் இல்லை. நிதானமாகத்தான் மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாகக் கார் மோதி விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. தலையையும் உடலையும் இணைக்கும் பின் கழுத்துப் பகுதியில் உள்ள...
ப்ளாஸ்டிக் அல்லது மர ஸ்டூல். ஜக்கார்டு ஜரிகை வேலைப்பாடு கொண்ட, பொன்னாடையால் போர்த்தப்பட்டிருக்கும் அந்த ஸ்டூல். மேலே ஒரு தாம்பாளத் தட்டு. வெற்றிலை. அஜந்தா பாக்கு பாக்கட். இரண்டு வாழைப்பழம். அதன் மேல் செருகி வைக்கப்பட்ட ஊதுபத்தி. பின்னணியில் எம்.ஜி.ஆர். புகைப்படம் செங்கல்லால் முட்டுக்கொடுக்கப்பட்டு...
எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிக் ஹங்கர்ஃபோர்ட் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவியிருக்கிறார். நட்மெக் முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் இவர். தன் மகள் எலிசபெத் பெயரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். நட்மெக் ஒரு முதலீட்டு ஆலோசனை...