Home » காஷ்மீர் தேர்தல்: ஓட்டுகளும் ஓட்டைகளும்
இந்தியா

காஷ்மீர் தேர்தல்: ஓட்டுகளும் ஓட்டைகளும்

2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முஃப்தி முகமத் சையித் வென்றது 28 இடங்கள். பி.ஜே.பி. வென்றது 25 இடங்கள். பி.ஜே.பி.க்கு துணை முதல்வர் பதவியளித்து முஃப்தி முகமது சையித் முதல்வரானார். சில மாதங்கள் பேச்சு வார்த்தை நடந்து அடுத்த வருடம்தான் பதவியேற்பு நடந்தது. அவர் இறப்புக்குப் பிறகு அவர் மகள் மெஹபூபா முஃப்தி பி.ஜே.பி. ஆதரவுடன் முதல்வரானார். முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் என் செல்வாக்கை நான் வளர்க்கிறேன். இந்துக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் பி.ஜே.பி. தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளட்டும் என்பது போன்ற தோற்றம் அளித்தது இவர் ஆட்சி. காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள், படுகொலைகள் நடந்தபோதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பதினைந்து வயதுச் சிறுவன் கொல்லப்பட்டது பற்றிய கேள்விக்கு அந்தச் சிறுவன் டாஃபியும், பால் பாக்கட்டும் வாங்கவா அங்கே சென்றான் என்று பதில் கேள்வி எழுப்பி, மக்களின் கோபத்துக்கு ஆளானார்.

மெஹபூபாவின் முரட்டுத்தனமான முட்டுகளுக்கு மரியாதை கொடுக்காமல் இரண்டாண்டுகளில் ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி. கத்வா சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளின் ஆதரவுப் பேரணியில் பி.ஜே.பி. இருந்தது. படுகொலையும், பேரணியும், காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் பி.ஜே.பி.க்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஜனநாயக வழியில் சென்றால் எப்போது காஷ்மீர் ஆட்சியைப் பிடிப்பது என்று யோசித்திருக்கலாம். ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார்கள். 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பல வருடக் கனவான காஷ்மீர் தன்னாட்சி நீக்கும் சட்டத்தை முன்வைத்து பரப்புரை செய்தது பி.ஜே.பி. ஆட்சிக்கு ஆதரவு விலக்கிக் கொண்டதன் மூலம் இந்தப் பரப்புரைக்கு இந்தியா முழுவதும் இந்துக்களின் ஆதரவு கூடியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!