Home » உப்புமா செய்வது எப்படி?
இந்தியா

உப்புமா செய்வது எப்படி?

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 36 கட்சிகள் இருக்கின்றன. தோராயமாக என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். சிலர் வருவதும் போவதுமாக இருப்பதால் எண்ணிக்கை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். 36 என்ற எண்ணைப் பார்த்ததும் இது ஒரு பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணி என்று தோன்றினால் அது தவறு. 36 கட்சிகளில் 19 கட்சிகளுக்கு சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ ஒரு உறுப்பினர்கூடக் கிடையாது.

இந்தியா கூட்டணிக்கு உப்புமா எதிர்ப்புக் கூட்டணி என்ற பெயர் எவ்வளவு பொருத்தமோ தெரியாது, என்.டி.ஏ. கூட்டணிக்குத் தாராளமாக உப்புமாக் கூட்டணி என்று பெயர் வைக்கலாம். குறுகிய நேரத்தில் சட்டெனத் தயாராகும் உணவு உப்புமா. அதைப்போல இன்ஸ்ட்டண்ட் கட்சிகளால் ஆனது இந்தக் கூட்டணி. ஆட்சி அமைக்க என்றே கட்சியை உடைத்து சுடச்சுட உருவான கட்சிகள்தான் பலவும். சிவசேனா – ஏக்நாத் ஷிண்டே, என்சிபி – அஜித் பவார், ஆர்எல்ஜேபி – பஷுபதி குமார், அப்னாதள் (சோனிலால்) – அனுப்ரியா, என்டிடிபி – சின்வாங் கொயங், சிக்கிம் க்ரன்டிகாரி மோர்ச்சா – ப்ரேம் சிங் தமங் போன்ற பலர் கட்சி உடைப்பு அல்லது கூட்டணித் தாவல் மூலம் ஆட்சியில் பங்கேற்பவர்கள். இந்த அறமற்ற போக்கில் மாநில மக்கள் நலன் என்னானது என்று பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அருமையான தகவல்கள் நிறைந்த கட்டுறை மேடம்.
    அந்த வடிவேல் காமடி வின்னர் இல்லை. தலைநகரம் படத்திலிருந்தது. அதை மட்டும் திருத்திக்கொள்ளவும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!