Home » உப்புமா எதிர்ப்புக் கூட்டணி
இந்தியா

உப்புமா எதிர்ப்புக் கூட்டணி

திமுக உறுப்பினர் சிவா மக்களவையில் பேசும்போது உப்புமாக் கதை ஒன்றைக் குறிப்பிட்டார். உப்புமா வேண்டாம் என்று சொல்லிய கல்லூரி மாணவர்களிடம் என்ன வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தினார்களாம். பெரும்பான்மை வாக்குகள், பூரி, இட்லி, மசாலா தோசை, ஆம்லெட் என்று பல உணவுகளுக்குப் பிரிந்து விழுந்ததால் யாரும் விரும்பாத உப்புமாவே மீண்டும் வெற்றி பெற்றதாம். இதைக் கடந்த தேர்தலில் பிஜேபி பெற்ற வெற்றியுடன் ஒப்பிட்டு இந்த முறை நாங்கள் உப்புமா வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறோம், ஒற்றுமையாக இருந்து பிஜேபியைத் தோற்கடிப்போம் என்றார்.

உப்புமா வேண்டாம் என்று சொல்லும் கட்சிகள் இணைந்து தொடங்கியிருக்கும் கூட்டணிக்கு இந்தியா என உச்சரிப்பு வரும்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணி தற்போது 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. இவர்கள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் கிண்டியிருக்கும் கிச்சடி எப்படி இருக்கிறது என்று தெரிந்தால்தானே அடுத்தத் தேர்தலில் உப்புமாவுக்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை அறிய முடியும்? இந்தியா என்று பேரு வைத்தவர்கள் தங்கள் மாநில மக்களுக்கு ஒழுங்காக சோறு வைத்தார்களா? பார்க்கலாம்.

பீமாரு மாநிலங்கள் என்றழைக்கப்படும் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் பீகாரும் ஒன்று. முதல்வர் நிதிஷுடன் லாலுவும் இந்தியா கூட்டணியில் இருக்கிறார். லாலு சகாப்தத்துக்கு முடிவு கட்டிய பிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும் வளர்ச்சியும் அதிவேகமாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிதிஷ் குமார் கட்சியே ஆட்சியில் இருக்கிறது. வளர்ச்சி விகிதம் தற்போது பெருமளவு குறைந்திருக்கிறது. தனிநபர் வருமானம் இன்னும் தேசிய சராசரியைவிடக் குறைவாகவே இருக்கிறது. பணியில் இருப்போர் சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனாலும் வேலையற்றோர் அதிகம் இருக்கும் இந்திய மாநிலங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது பீகார். வறுமையில் அவதிப்படும் மக்கள், கல்வியறிவு என மற்ற பெரும்பாலான புள்ளிவிவரங்களும் இதைப்போலவே. முன்னேற்றம் இருக்கிறது, ஆனால் தேசியச் சராசரியைவிடப் பின்தங்கியிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!