Home » Archives for தர்ஷனா கார்த்திகேயன் » Page 2

Author - தர்ஷனா கார்த்திகேயன்

Avatar photo

ஆளுமை

இரண்டு பேரில் யார் பாரதியார்?

பாரதி ஆழ்வாரை உங்களுக்குத் தெரியுமா? பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரல்லர். பதிமூன்றாவதாக யாராவது சேர்த்துவிட்டார்களா என்றால் அதுவுமில்லை. இவர் நமது மகாகவி பாரதிதான். சென்னை தரமணி மத்திய கைலாஷ் கோயிலில்தான் பாரதியாருக்கு ஆழ்வார் அந்தஸ்தும் ஒரு சிலையும் உள்ளன. ஓரடி உயரமுள்ள ஐம்பொன் சிலை. முறுக்கு...

Read More
ஆளுமை

உம்மன் சாண்டி: மக்களின் முதல்வர்

பீதி, அது ஒன்று தான் அங்கிருந்த அத்தனை பேரிடமும் எஞ்சியிருந்த ஒரே உணர்வு. நேரமில்லை. யாராவது ஒருவரேனும் துணிந்து விவேகமாகவும் வேகமாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள் மரீனா. கைக்குக் கிட்டிய ஒரு தொலைபேசியிலிருந்து தன் உறவினரைத் தொடர்பு கொண்டு, அவர் மூலமாகத் தன் மாநிலத்தின் முதலமைச்சரிடம்...

Read More
இந்தியா

நதியெல்லாம் வெள்ளம், நகரெல்லாம் நாசம்!

டெல்லி வெள்ளக் காடாகிவிட்டது. யமுனையின் வெள்ளப் பெருக்கு எக்கணமும் மோசமடைந்து நகருக்குள் நுழைந்து முற்றிலும் நாசமாக்கிவிடலாம் என்று கணந்தோறும் அலர்ட் செய்திகள் வந்து, இப்போதுதான் மூச்சுவிட்டுக்கொள்ள சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். ஒருவாறாக மழை குறைந்திருக்கிறது. இம்முறை வரலாறு காணாத மழை வெள்ளம்...

Read More
கல்வி

பைஜுஸ்: சரியும் கல்விக் கோட்டை

‘குளிர்காலத்தின் ஆழங்களில்தான், யாராலும் வெல்ல முடியாத ஒரு கோடை எனக்குள் இருப்பதை நான் கண்டு கொண்டேன்’ ஆல்பர்ட் காம்யூ வின் மிகப் பிரபலமான வாசகம் இது. பைஜுஸ் நிறுவனத் தலைவர் பைஜூ ரவீந்திரன், தன் ஊழியர்களுக்குச் சென்ற செப்டம்பர் மாதத்தில் விடுத்த செய்தியில் இவ்வாசகம் இடம்பெற்றிருந்தது. இப்போது...

Read More
சமூகம்

வீட்டிலிருந்தே ஏமாறுவது எப்படி?

‘வீட்டில் உட்கார்ந்தபடி சம்பாதிக்கலாம். உங்களிடம் அடிப்படை ஆங்கில அறிவும் ஒரு திறன்பேசியும் இருந்தால் போதும். எந்த முதலீடும் தேவையில்லை. வயதோ, கல்வித் தகுதியோ, இனமோ, இடமோ எதுவுமே தடை இல்லை. தினமும் சிலமணி நேரங்களை மட்டும் செலவிட்டு ரூபாய் ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை இலகுவாகப் பணம் ஈட்டலாம்.’ சில...

Read More
காதல்

ஒரு பேப்பர், ஒரு கையெழுத்து

“ம்மா.. என்னால சத்தியமா முடியாது.. விட்டுட்டு மட்டும் போகாத please” அறையெங்கும் கண்ணீர் வெடித்துத் தெறிக்கக் கதறிக் கொண்டே சாஷ்டாங்கமாக மனைவி காலில் விழுந்தான் ஹரி. “நான் முடிவு பண்ணியாச்சு ஹரி. இனிமே யோசிக்க எதுவும் இல்ல. தயவுசெஞ்சு விட்டுடு.” “இந்தச் சின்னக் குழந்தைகளை வச்சுக்கிட்டு நான் என்ன...

Read More
கோடை

கற்றுக்கொள்ளும் காலம்

இந்தக் கோடைக்கு சென்னையின் சில பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோடை முகாம்கள் தொடர்பான தகவல்களை மெட்ராஸ் பேப்பருக்காகச் சேகரித்திருந்தோம். தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் என்று வாரத்தில் ஐந்து நாட்கள், அதிகபட்சமாக மூன்று வாரங்கள் வரை இவை நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு ஆயிரத்து எண்ணூறு...

Read More
முகங்கள்

பொழுது விடியும் நேரம்: இரவு 2.30

இன்றைய இணைய யுகத்தில் முகமற்ற மனிதர்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவை சமூக வலைத்தளங்களில் இருக்கின்ற போலிக் கணக்குகள். அடுத்ததாகத் தங்களின் அந்தரங்க வாழ்க்கைச் சவால்களைச் சமாளிக்க இணையக் குழுக்களில் உதவி கோரும் அனானிமஸ்கள். மெய்நிகர் வெளிக்கு அப்பால் இருக்கின்ற யதார்த்த உலகிலும் பல முகமிலிகள்...

Read More
மழைக்காலம்

குடைக்குள் மழை

பெருநகரங்களில் மழை என்பது ஒரு சகிக்க முடியாத இடைஞ்சல். சீரற்ற வடிகால் அமைப்பு மழைநீருடன் இணைந்து நடத்தும் சேற்றுத் தாண்டவம் ஒருபுறம். வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம். வண்டிகளில் பயணிக்கவும் முடியாது, நடந்து செல்லவும் முடியாது. இத்தனை சிக்கல்களுக்குள் எங்கோ ஒரு எமனும்...

Read More
விவசாயம்

பால் பேட்டையில் ஒரு பசுமைக் கோட்டை

இயற்கை வாழ்விலிருந்து எந்த வேகத்தில் பிரபஞ்சம் இயந்திர யுகத்துக்கு நகர்ந்ததோ, அதே வேகத்தில் இப்போது பசுமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல பதப்படுத்தப்பட்ட பளபளப்பான உணவு வகைகள் மீது மக்களுக்கு இருந்த மோகமும் குறைந்து வருகிறது. இயற்கையாக விளையும் உணவு வகைகளின் மேல் மனிதனின் ஆர்வம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!