நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் பல காரணிகளுள் ஒன்று, அந்நாட்டில் உள்ள, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை. எளிமையாகச் சொல்வதென்றால், சுமார் எட்டரைக் கோடி இந்திய ரூபாய் பெறுமதியுடைய சொத்துக்களைக் கொண்ட மில்லியனர்களின் எண்ணிக்கை. உலகளாவிய சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும்...
Author - தர்ஷனா கார்த்திகேயன்
“நீ சொல்வது போல முப்பது வருடங்கள் உன் கணவர் இங்கு வேலை செய்ததற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. ஆகையால் இழப்பீடு எதுவும் தருவதற்கு இல்லை” என்ற நில உடைமையாளரின் பதிலில் உடைந்து போனார் ம்யேசா. அப்போதுதான் கணவர் இறந்து ஈமச்சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த எதிர்வினை அவருக்குத் துன்பத்தைத்...
அந்தக் கடற்கன்னி ஓர் இளவரசனைக் காதலித்தாள். ஆனால் கடற்கன்னியாக இருப்பதால் அவளால் அவனைத் திருமணம் செய்ய முடியவில்லை. அதற்காக அவள் சோர்ந்து விடவில்லை. தன்னுடைய மாய சக்திகளால் இடுப்புக்குக் கீழே தன் செதில்களைக் கால்களாக மாற்றி அமைத்துக் கொண்டாள். இதற்கு மேல் நீரில் தனக்கு வாழ்வு இல்லை என்று தெரிந்தும்...
உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போதையப் பிரதமரின் ஆட்சிக் காலம் முடியவும் இல்லை. யாரும் இறக்கவும் இல்லை, தேர்தல் நடக்கவும் இல்லை. ஆனாலும் புதிய பிரதமர்! பிரதமர் லீ சியான்ன்...
பூலேஷ்வரி தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும். எழுபதுகளின் பாட்னாவில் இன்று இருப்பதைப் போன்ற நவீன வாடகை வண்டி வசதிகள் எதுவும் இருக்கவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்களின் காரில்தான் செல்லவேண்டும் அல்லது வாடகை ரிக்ஷா. பூலேஷ்வரியின் கணவரிடம், அவருடைய தொழில் நிமித்தம்...
“அத்த, ஏன் அம்மா அப்புடி சொன்னாங்க?” புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மழையும் கனமாகத் தான் பெய்கிறது. இந்த அரசாங்கம் விடுமுறை விட்டால்தான் என்ன?அல்லது பள்ளிக்கூடம்தான் இந்தப் போட்டிகளைத் தள்ளி வைத்தால்தான் என்ன?. ஆற்றாமை தாளவில்லை மீராவுக்கு. மகளின் கேள்வி அவள் யோசனையைத் துண்டித்தது. எந்த...
ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை. கர்ப்பிணியுடன் தங்கள் வண்டியிலேயே அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். வண்டிச் சக்கரம் பழுதடைந்து விடுகிறது. வேறு வழியே இல்லாமல், நிறைந்த இரவில், கழுதைப் புலிகளின்...
சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும்...
நோர்வே நாட்டின் மேற்கு கரையோரப் பகுதியொன்றில் வண்டியோட்டியபடி சென்று கொண்டிருக்கிறார் அந்த 64 வயது முதியவர். அமைதி நிறைந்த அழகான நாட்டுப்புறத் தெருக்களில் தனிமையில் வண்டியோட்டிச் செல்வது அவருக்குப் பிடிக்கும். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உலகின் அதிஉயர் விருதுகளில் ஒன்று...
மழைக்காலத்துக்கென்றே நேர்ந்து விடப்பட்டிருக்கும் பிரத்யேகமானதொரு நோய் மெட்ராஸ் ஐ. இந்திய உபகண்டத்தில் உருவான இதனால் ஏற்பட்ட முதல் பாதிப்பு, ஆசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பழைய கண் மருத்துவமனையான ‘மெட்ராஸ் ஐ இன்ஃபார்மரி’ (Madras Eye Infirmary)-யில் பதிவு செய்யப்பட்டது. அதனால் இருபதாம்...