நல்ல, அருமையான, நிறைய பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய பெரிய விளையாட்டு மைதானம். ஆப்கனிஸ்தானின் ஃபரா மாகாணத்தில் உள்ளது. விழா அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. அரசாங்கமே நடத்துகிற விழா என்பதால் ஆரவாரம் சிறிது அதிகம். நீதிபதிகள், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள நிர்வாக அதிகாரிகள் ஒரு பக்கம் நிறைந்திருந்தார்கள். மறுபுறம் திருவிழாவைக் காண்பதற்காக ஆயிரக் கணக்கில் பொது மக்களும் மைதானத்தில் கூடியிருந்தார்கள். எத்தனை காலம் ஆகிவிட்டது அக்காட்சியை நேரில் கண்டு! பழைய தாலிபன் ஆட்சிக் காலத்தில் கண்டது. அதன்பின் இல்லை. அதே தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் (அக்குன்ஸதா பொறுப்புக்கு வந்தது ஆகஸ்ட் 15, 2021) இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment