Home » Archives for May 2023 » Page 6

இதழ் தொகுப்பு May 2023

புத்தகம்

மூன்றெழுத்து மந்திரம்

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. இரண்டுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட். வசூலும் அமோகம். பல தமிழ்த் திரைப்படச் சாதனைகளை முறியடித்துவிட்டது. அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான். இது பொன்னியின் செல்வன் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட...

Read More
இந்தியா

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம் என்ன?

ஒரு மாநிலத் தேர்தலின் வெற்றியை ஒரு கட்சி நாடு முழுவதும் கொண்டாடிய காட்சிகளை கடந்த 13-ஆம் தேதி நாம் அனைவரும் பார்த்தோம். கர்நாடகக் காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலமாக இருந்தது. கர்நாடக மாநிலத் தேர்தலின் வெற்றி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வளித்திருக்கிறது. அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களை...

Read More
கணினி

பிரவுசர் யுத்தம்

“ஏன் இத்தன வெப் பிரவுசர் இருக்கு?” என்று எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரில் பெரும்பாலோனோர் அதிக நேரம் பயன்படுத்தும் சாப்ட்வேர் வெப் பிரவுசர்தான். இணைய உலவிகள். பரந்துபட்ட இணைய வெளியில் நாம் மின்னல் வேகத்தில் பயணிக்க உதவுபவை இந்த வெப் பிரவுசர்கள். வெப் பிரவுசர்கள் கடந்து வந்த பாதை...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

வானமா எல்லை?

பகுதி 3: எலான் மஸ்க் என்றொரு தான்தோன்றி 1984ஆம் ஆண்டு. பன்னிரண்டு வயதான சிறுவன், தான் நிரலெழுதிய ப்ளாஸ்டார் (Blastar) என்ற விடியோகேம் விளையாட்டை பிசி அண்ட் ஆபீஸ் டெக்னாலஜி (PC and Office Technology) என்ற பத்திரிகை நிறுவனத்திற்கு ஐந்நூறு டாலர்களுக்கு விற்கிறான். தான் உலகிலேயே மிகப் பணக்காரனாகப்...

Read More
ஆன்மிகம்

கலெக்டரும் கடவுளும்

கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே? ஊரில் சில பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாகச் சொல்வதுண்டு. இறைவனை யாராவது பார்த்திருக்கிறார்களா? இந்தக் கலியுகத்தில் அது சாத்தியமா? சாத்தியமாகியிருக்கிறது...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

கறுப்பு ஆடு

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் எல்லோருமே திருடர்களாக இருந்த நாடு ஒன்று இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து...

Read More
தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றம்: இடமாறு தோற்றப் பிழை

முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை...

Read More
உலகம்

ஆட்சிக்கு டாட்டா; கணவருக்கு பைபை!

சன்னா மரின், பின்லாந்து பிரதமர். மிக இளம் வயதில் இப்பதவிக்கு வந்தவர். உலகின் இளைய தலைவர் என்ற பெருமை பெற்றவர். இளம் தலைவர் என்றால் அறுபது வயதில் நம்மூர் இளைஞர் அணித் தலைவர் போல் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. 1985-இல் பிறந்தவர். 2019இல் அதாவது முப்பத்து நான்கு வயதில் பின்லாந்தின் பிரதமர் பதவியை...

Read More
நம் குரல்

திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...

Read More
சமூகம்

மாயவலையும் மனித விலையும்

எங்களுடைய ப்ராஜக்டில் வேலை பார்க்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் அவன். திடீரென அவசர சொந்தப் பிரச்னை என்று விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த கிராமத்துக்குப் போனவன் ஒரு வாரமாகத் திரும்பவேயில்லை. என்னவென்று விசாரிக்க அழைத்தபோது அவன் தந்தையார், தான் அத்தனை வருடம் சேர்த்து வைத்த சேமிப்பை ஒரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!