Home » Archives for July 2022 » Page 2

இதழ் தொகுப்பு July 2022

உணவு

மன அழுத்தமும் மிகு உணவும்

மன அழுத்தம்தான் இன்றைக்கு மக்களின் பெரும் பிரச்னை. அது வருவதற்கு எத்தனையோ காரணங்கள். வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என்று எங்காவது ஏதாவது வடிவில் வருகிற ஒரு சிறு பிரச்னைகூட பூதாகாரமாகி மனத்தைக் கவ்வி, சோர்வடைய வைத்துவிடும். அப்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இஷ்டத்துக்குச் சாப்பிடத்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 8

8. சிக்கனம் மெக்கானிக் ஒருவர் தன்னிடம் கார் பழுதுபார்க்க வந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணரைப் பார்த்து “ஏன் சார் நா கார் இஞ்சின்ல பாக்குற அதே ரிப்பேர் வேலைய தான நீங்க மனுஷ இதயத்துக்குப் பண்றீங்க. எனக்கு மட்டும் ஆயிரத்துல சம்பளம்; உங்களுக்கு மட்டும் ஏன் லட்சத்துல சம்பளம்?” என்று கேட்டார்...

Read More
வரலாறு முக்கியம்

டயட் எப்படி தோன்றியது?

உணவு என்பது தவிர்க்க இயலாதது. உயிர்வாழப் பிறந்த எவரும் உணவில்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் உடலுக்குத் தேவையான, இயங்குவதற்குத் தேவையான சக்தி உணவில் இருந்தே கிடைக்கிறது. உடல் எப்போதும் வளரவும், இயங்கவும் காரணமான வளர்சிதை மாற்றத்திற்கான சக்தி உடல் ஏற்றுக் கொள்ளும் உணவிலிருந்தே பெறப்படுகிறது...

Read More
ஆன்மிகம்

சித் – 9

9. காலாங்கி நாதர் சித்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் இப்புவிக்கு வருவதும் போவதும் புதிரான ஒன்று. ஆனால் அவர்களது வாழ்வும் செயலும் வரலாற்றில் ஆழமாக நிலைபெற்றுவிடுகிறது. அசாதாரணமான இவர்களின் வாழ்க்கை சாதாரணமானவர்களுக்கு விசித்திரமாக இருப்பதால் சித்தர்கள் இறைவன் என்றே பலரால்...

Read More
வென்ற கதை

இறங்கி அடித்தால் வெற்றி நிச்சயம்!

கோவை, பஞ்சாலைகளுக்குப் புகழ் பெற்ற நகரம். இப்படிச் சொல்லி விடுவது எளிது. ஆனால் தரமான பஞ்சை இனம் காண்பது எளிதல்ல. பஞ்சின் நீளம் எவ்வளவு? அது நன்றாக விளைந்துள்ளதா? பலம், தடிமன் சரியான அளவில் உள்ளதா? அந்தப் பஞ்சின் வியர்வை உறிஞ்சும் தன்மை எந்த அளவில் இருக்கிறது? ஆடை நெய்யும் தரம் உள்ளதா? இந்தப்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 9

9. எது உன்னுடையது? புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. பௌத்தத்தின் சூன்யக் கோட்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்ட மிகச் சிலரில் ஒருவர். இவ்வுலகில் எதுவும் நிலைப்பதில்லை. உளப்பூர்வமான மற்றும் ஜடப்பூர்வமானவற்றுக்கு இடையிலான உறவு மட்டும் தான் நீடிக்கிறது என்று அவர் நம்பினார். ஒருநாள் சுபூதி சூன்யத்தின்...

Read More
இங்கிலாந்து உலகம்

அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

அடுத்த பிரிட்டிஷ் பிரதமராக வரப் போவது யார்? ஐரோப்பா முழுதும் இன்றைக்கு இதுதான் கேள்வி. போரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதாக அறிவித்ததும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பங்குபற்றலாம். ஒருவர் போட்டியில்...

Read More
உணவு

ஜிம்முக்குப் போனால் ஸ்லிம் ஆகி விடுவோமா?

எடை விஷயத்தில் அதிகக் கவலை கொள்பவர்கள் பெண்கள். குறிப்பாகத் திருமணமாகி, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், எடை கூடிவிடுகிறது. பிறகு அதை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இப்போது எல்லோரும் ஜிம்முக்குப் போகிறார்கள். அங்கே போனால் எடைக் குறைப்பு கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்...

Read More
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 9

9. எடுக்க எடுக்க எண்ணெய் நவீன உலகில், ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம். இரண்டு உலகப் போர்களையும் ஏராளமான இதர போர்களையும் கண்டு களித்துவிட்ட பிறகு சற்றே புத்தி சுவாதீனம் அடைந்த மேற்கு தேசங்கள் பிராந்தியத்துக்குப் பிராந்தியம், துறைக்குத் துறை...

Read More
ஆளுமை இந்தியா

திரௌபதி முர்மு: சில குறிப்புகள்

“அரசாங்கத்தையும் வனக் குழுக்களையும் நம்பி மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது; அதைப் பாதுகாக்கக் கூட்டு முயற்சி தேவை” என்று சில ஆண்டுகளுக்கு முன் (அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராகப் பணியாற்றியபோது) பேசி, சர்ச்சைக்கு வித்திட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் திரௌபதி முர்மு. இன்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!