Home » Archives for July 2022

இதழ் தொகுப்பு July 2022

இங்கிலாந்து உலகம்

வரலாறு காணாத வெப்பம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கடந்த வாரம் வந்த வெப்ப அலையினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜூலை 18, 19 ஆகிய இரு தினங்களும் பிரிட்டனின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தது. பிரிட்டன் வரலாற்றில் முதல் தடவையாக வெப்ப நிலை 40°C எல்லையைத் தாண்டியது. இங்கிலாந்தில்...

Read More
உணவு

‘எந்த டயட்டையும் ஆயுள் முழுக்கப் பின்பற்றுவது கடினம்’ – நியாண்டர் செல்வன்

ஜிஎம் தொடங்கி வாரியர் வரை எவ்வளவோ விதமான டயட் முறைகள் இருந்தாலும் தமிழர்கள் மத்தியில் ஃபுல் மீல்ஸுக்குப் பிறகு புகழ் பெற்ற உணவு முறை என்றால் அது பேலியோதான். காரணம், நியாண்டர் செல்வனின் ஆரோக்கியம் நல்வாழ்வு ஃபேஸ்புக் குழு. ஏராளமான தமிழர்கள் பேலியோவைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைத்திருக்கிறார்கள்...

Read More
நகைச்சுவை

என்ன பெரிய வரலாறு? என்ன பெரிய வெப்பம்?

‘இது வெப்ப வாரம். அனல் திங்கள், கனல் செவ்வாய், உஷ்ண புதன், நெருப்பு வியாழன், தீ வெள்ளி…’ என்று ஒரு விளம்பரம் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி சென்ற வாரத்தில் நியூஸ் சேனல், சோஷியல் மீடியா எங்கு பார்த்தாலும் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை பற்றித் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். நடு...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

நாசமான நாடும் ஒரு நடமாடும் விக்கிபீடியாவும்

‘ஜானி’ இங்கிலீஷ் திரைப்படத்தில் மிஸ்டர் பீன் யாரும் எதிர்பாராத விதமாக மன்னரின் கிரீடத்தைத் தட்டிப் பறித்து முடிசூடுவது போன்ற ஒரு காட்சி வரும். அதற்குச் சற்றும் குறையாததுதான் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகத் தேர்வான பெரும் தலைவர் அற்புத ஜோதி, லிபரல் ஜனநாயக மாணிக்கம்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 9

இதுகளுடன் சேர்ந்தால் சத்தியமாக எழுத்து போய்விடும். இலக்கியத்தை எடுத்துவிட்டால் ‘தான்’ என்ன? 9 ஆபீஸ் டைம் ஆபீசை விட்டு வெளியில் வந்தவனுக்கு என்ன செய்வது எங்கே போவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை இதுவரை அவன் வாழ்நாளிலேயே வந்ததில்லை. செய்வதற்கு எதாவது இருப்பவனுக்குதானே இங்கே போகவேண்டும் அங்கே...

Read More
நம் குரல்

திமுகவும் மின்சாரமும்

கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, திமுக அரசுக்கும் மின்சாரத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. ஆம்; திடீர் திடீரென்று மின்சாரம் தடைபட்டுத் தடைபட்டுத்தான் வருகிறது. சென்னையிலேயே இப்படியென்றால் மற்ற பகுதிகளில் எப்படியோ! ‘மின்சார வாரியம் மின் கட்டணத்தை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 9

9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்! அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள் வெளியிடும் செய்திகளில் ஐரோப்பியக் கண்ணோட்டம்தான் நிறைந்திருக்கும். இந்திய மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்...

Read More
நுட்பம்

‘I’ யோவென அலறாதீர்கள்!

புது போன் வாங்க கடைக்குப் போகிறோம். போன காரியம் முடிந்தது என்று போனை வாங்கிக்கொண்டு அங்கே இங்கே பார்க்காமல் திரும்பி வந்துவிடுவோமா? நமக்குக் கட்டுப்படியாகும் மாடல்களைப் பார்த்து, வாங்குவது ஒரு பக்கம் என்றால் ஓரக் கண்ணால் அங்கே இருக்கும் வெள்ளை மேடையில் பளப்பளக்கும் ஐபோன் வகையறாக்களைப் பார்த்துப்...

Read More
உணவு

டயட் எனும் பூதம்

ஆரம்பித்த வேகத்திலேயே பலரால் கைவிடப்படுவதில் நம்பர் ஒன், டயட். அதுவும் பாதி பலன் கொடுத்த நிலையில் கைவிட்டுவிட்டு, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்க நினைத்தால் பேய் பிசாசு பூதம் போல அச்சுறுத்தக்கூடியதும் அதுவே. எதனால் இப்படி ஆகிறது பலருக்கு? பிசி ஜான்சன் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான...

Read More
உணவு

புத்திசாலித்தனமாகச் சாப்பிடுங்கள்!

முன்பெல்லாம் மாரத்தான் என்றால் மிகச் சில வீரர்கள் கலந்துகொள்ளும் ஒரு பந்தயம். இன்று உடல் நலனில் அக்கறை உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் முழு மாரத்தான், அரை மாரத்தான் என்று வாரம் தோறும் ஓடுகிறார்கள். உலகமெங்கும் இது நடக்கிறது. ஆனால் மாரத்தான் ஓடுவது அவ்வளவு எளிதல்ல. தம் கட்டி மணிக் கணக்கில் ஓடுவதற்கு உடல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!