Home » ஐந்து ரூபாயில் வாழ்வது எப்படி?
உணவு

ஐந்து ரூபாயில் வாழ்வது எப்படி?

சின்னி

இன்றைக்கு ஐந்து ரூபாயில் என்ன வாங்க முடியும்? சிங்கிள் டீ கூடக் குடிக்க முடியாது. ஆனால் இந்தக் காசை வைத்துக் கொண்டு ஒரு நாள் பொழுதையே ஓட்டி விடுகிறார் சின்னி என்ற மூதாட்டி.

காலையில் தண்ணீர் விட்ட பழைய சோறு. மதியம் வெறும் புளிக் கரைசல், வரமிளகாய், உப்பு சேர்த்துக் கரைத்த ரசம் ஊற்றி வெறும் சோறு. இரவு வேக வைத்த பருப்புடன் சேர்த்துக் கொஞ்சம் சோறு. இதில் பருப்பு, அரிசி இரண்டுமே ரேஷனில் வாங்குபவை. புளி, மிளகாய் காடு, தோட்டங்களில் பொறுக்கி எடுத்து வருபவை. உப்பு மட்டுமே காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று சின்னி சொன்னபோது நம்புவதற்குச் சிறிது சிரமமாக இருந்தது. ஏனென்றால் அவர் உடுத்திருந்த உடை, எண்ணெய் ஊற்றி எரித்தாலும் எரியாது. அந்த அளவு அழுக்கு. அதைத் துவைப்பதற்குக்கூட சோப்பு, சோடா பயன்படுத்துவதில்லை. தண்ணீரில் ஒரு முக்கு முக்கி உடுத்திக் கொள்கிறார். சின்னி பைத்தியமோ, பிச்சை எடுப்பவரோ அல்ல என்பதும் இங்கே முக்கியம்.

வீரப்பனும், தமிழக அதிரடிப்படையும் போட்டி போட்டுக் கொண்டு சித்ரவதை செய்த மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, திம்பம், ஆசனூர், பர்கூர், கடம்பூர், சத்தியமங்கலம் பகுதிகளில் கொத்துக் கொத்தாய்க் கிடக்கின்றன. இதில் ஒரு கிராமமான ஊசிமலையில் சின்னி வசிக்கிறார். எண்ணி நாற்பது, ஐம்பது சோழகர் பழங்குடிகள் வசிக்கும் மலை கிராமம். சென்று சேர்வதே பெரும் பாடு…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!