Home » உக்ரையீனா
அரசியல் வரலாறு

உக்ரையீனா

1. தேசம் காத்தல் செய்

குண்டு விழப் போகிறது என்பது தெரியும். முதல் குண்டு ஏதாவது ஒரு கடலோர நகரத்தின் மீது விழும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடாவடித்தனத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்த முடிவெடுத்துவிட்டார்கள் என்றால் தலைநகரின் மீதே முதல் குண்டைப் போட்டு ஆரம்பித்து வைக்கலாம். அதிபர் மாளிகையின் மீதே குண்டு வீசுவதுகூடப் பெரிய விஷயமில்லை. ஏனெனில், ரஷ்யாவால் முடியாதது ஏதுமில்லை. உக்ரைனால் செய்யக் கூடியதும் ஒன்றில்லை. இது யுத்த நேரம். ஊகங்களும் கணிப்புகளும் பொய்த்துப் போவது சுலப சாத்தியம்.

உக்ரைன் ராணுவம் நூற்றுக் கணக்கான இடங்களை வட்டமிட்டு, சிறப்புப் பாதுகாப்புப் பிராந்தியங்களாக்கியிருந்தது. பொது மக்களுக்குக் கவலை தரும் விதமாக எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று அதிபர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) சொல்லியிருந்தாலும், அது அவர்கள் எட்டு வருடங்களாக மென்று கொண்டிருக்கும் கவலைதான். அதிபருக்கும் தெரியும். எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா எல்லை தாண்டும். எந்தக் கணத்திலும் குண்டு வெடிக்கும்.

ஆனால் அந்த முதல் குண்டு வெடிக்கும் இடம் அந்தோனவ் விமான நிலையமாக (Antonov Airport) இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஊருக்குத் தெரிந்து அது ஒரு கார்கோ விமான நிலையம். வெளி தேசங்களில் இருந்து வருகிற சரக்குகளும் உக்ரைனில் இருந்து ஏற்றுமதியாகிற சரக்குகளும் குவிக்கப்பட்டிருக்கும் பிராந்தியம். பூதாகார கண்டெய்னர்களும் ரட்சத கொடோன்களும் அந்தப் பிராந்தியத்தின் புற அடையாளங்கள். ஆனால் அந்தோனவ் விமான நிலையம் அதற்கு மட்டுமல்ல…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்உங்கள் எண்ணம்

  • பாரா சார், மிகச் சிறப்பான துவக்கம். பெரிதாக வெளிவராத சம்பவங்களை தந்திருக்கீங்க. உக்ரேன் ஒருநாள் கூட தாக்குப் பிடிக்காதுன்னுதான் எல்லாரும் சொன்னாங்க. ஆனால் இத்தனைநாள் ரஷ்யாவுக்கு டப் கொடுத்து ஆக்கிரமிப்பைத் தடுக்கும் ஆயுதம் அம்மக்களின் தேசபக்தி என்பது இப்போதுதான் தெரிகிறது. வரும் அத்தியாயங்களுக்கு வெயிட்டிங்.

  • இதழ் வெளியான முதல் நாளில் உள்நுழைவு சமாச்சாரங்கள் சரிபார்த்து வைத்ததோடு சரி. அவ்வளவு பிஸியெல்லாம் இல்லை. எப்போதும் போல கேவலமான என் நேர மேலாண்மையின் விழைவன்றி வேறில்லை. இன்று தான் பிஸ்மி சொல்லி உக்கிரமாக உக்ரையீனாவிலிருந்து ஆரம்பித்தேன். மனுஷன் உண்மையிலேயே நேரில் போயிருப்பாரோ?! என்ற எண்ணம் வருகிறது. தேசப்பற்றால் நாட்டைக் காக்க கூட்டு தற்கொலைக்கு சமானமான ஆபத்தான ஒரு காரியத்தை செய்யத்துணிந்த உக்ரைனியர்கள் புல்லரிக்க வைக்கிறார்கள். அதிநவீன ஆயுதங்களுக்கு எதிராக பெண்கள், ஆண்கள், வயோதிகர்கள், ஏன் குழந்தைகள் வரை உயிரை துச்சமாக எண்ணி கையில் கிடைத்த ஆயுதங்களுடன் பொங்கியெழுந்து வீதியிலிறங்கி போரிடுவதும் ரஷ்யப் படைகளை திக்குமுக்காடச் செய்வதும், நிமிர்ந்து உட்காரச் செய்தாலும், கண்களை ஈரமாக்காமலில்லை! நன்றி அன்பின் அன்பே! Pa Raghavan

  • ஒரு போரினால் ஏற்படும் சர்வ நாசங்களை மக்களின் துயரங்களைப் பற்றி அறிந்தும் இக் காலத்திலும் போர் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.கற்கால மனிதனின் மனநிலை மாறவே இல்லை.ஆயுதங்களே மாறுகிறது.
    இலங்கையின் நிலையும் உக்ரைனின் நிலையும் கண்டு மனம் பதைபதைக்கிறது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!