Home » உக்ரையீனா – 2
அரசியல் வரலாறு

உக்ரையீனா – 2

உக்ரையீனா தேசிய உணர்வெழுச்சியின் சரித்திரச் சின்னம்

2. மிதிபடு மண்

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ருமேனியாவின் தலைநகரமான புகாரஸ்டில் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒன்று நடந்தது. ரஷ்ய அதிபர் புதின் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஓர் உரையாற்றினார். எதற்கு என்றெல்லாம் கேட்கக் கூடாது. எப்படியும் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத்தான் போகிறது என்று அப்போதே தீய்ந்த வாசனை அடிக்கத் தொடங்கியதால் வம்பு மூலவரைக் கூப்பிட்டு வாயைப் பிடுங்கப் பார்த்தது நேட்டோ. புதினுக்கு இதெல்லாம் தெரியாததோ, புரியாததோ அல்ல. தவிர, தான் நம்புகிற ஒன்றை பகிரங்கமாகப் பேச அவர் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் பிரச்னை, அவர் நம்புவது உண்மைதானா அல்லது தான் அப்படி நம்புவதாக ஊர் உலகை நம்ப வைக்க மேற்கொண்ட அரசியல் நாடகமா என்று கணிப்பதில் உள்ளது. அவ்வளவு எளிதாக எந்தக் கணக்கிலும் சிக்கிவிடக் கூடியவர் இல்லை அவர்.

அந்த மாநாட்டில் புதின் உக்ரைன் குறித்துச் சில சொற்கள் பேசினார். அன்றைய ஜெர்மனியின் ஹிட்லர், இன்றைய வட கொரியாவின் கிம் போன்ற மிகச் சிலரைத் தவிர எப்பேர்ப்பட்ட அராஜகவாதியும் அப்படியெல்லாம் பேசுவதற்குச் சிறிது யோசிப்பார்கள். ஏனெனில், சரித்திரம் என்பது தனி நபர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமல்ல. ஆளுக்கொரு விதமாக, பிராந்தியத்துக்கு ஒரு விதமாக அது எழுதப்பட்டாலும் உண்மைக்கு ஒரே வடிவம், ஒரே நிறம், ஒரே குணமதான். எப்படிச் சுற்றி வளைத்து பூவலங்காரம் செய்து ஜோடித்து வைத்தாலும் காயம் பட்ட இடத்தின் ரத்தப் படலம் கண்ணில் படாமல் போகாது.

புதினின் வாதத்தை மிகவும் சுருக்கி ஒரு வரியில் சொல்வதென்றால் உக்ரைன் என்பது ஒரு தனித்த தேசமே அல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!