Home » ‘யார் வென்றாலும் எங்களுக்குப் பயன் இல்லை!’
தமிழ்நாடு

‘யார் வென்றாலும் எங்களுக்குப் பயன் இல்லை!’

தேர்தலும், ஜாதியும் பிரிக்க முடியாதவை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளூர ஒளிந்திருக்கும் ஜாதிப்பாசம் உச்சத்திற்கு வந்துவிடும். தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், முடியும் வரை, தேர்தலின் முதுகில் ஜாதியும், ஜாதிகளின் முதுகில் தேர்தலும் ஊர்வலம் வரும். இதில் ஒரு விந்தை என்னவெனில், ஜாதியில் உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற வித்தியாசம் மைனஸாக இல்லாமல், ப்ளஸ் ஆக, ஒரு பலமான விஷயமாக மாறுவது தேர்தல் காலங்களில் மட்டும்தான்.

தேர்தல்களின் போதுதான் பட்டியலின மக்களைச் சகோதரர்களாகவும் அவர்களிடம் சமத்துவம் பேணுவது ஒன்றே லட்சியம் என்பதாகவும், எல்லா ஜாதிக்காரர்களும் அவர்களுக்கு சோப்புப் போட்டு அரவணைக்கிறார்கள். வீடு தேடி வந்து கட்டித் தழுவி, அவனது பழைய சோற்றினை பங்கிட்டு உண்பதுவரை அவனை மிதப்பிலேயே வைத்திருக்கிறார்கள். எல்லாம் தேர்தல் முடியும்வரைதான். தேர்தல் முடிந்து அரிதாரம் கலைத்த பின்பு, ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான்.

தமிழ்நாடு முழுதும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சேரி அல்லது காலனிப் பகுதிகள் உள்ளன. இம்மாதிரியான காலனிப்பகுதிகள்  எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. ஏன்? இந்தியா முழுமைக்குமே உள்ளன. வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு முகங்கள். ஆனால், இவர்களின் வாழ்க்கைத்தரம், சமூக அடையாளம் எங்கேயும் ஒன்றுதான்.

இவர்களின் தற்போதைய எண்ண ஓட்டங்கள் என்ன? கட்சிகளுக்கும், தேர்தல்களுக்கும் இவர்களின் செய்தது நிறைய. பதிலுக்கு அன்றைய தினம் மட்டும் இவர்களைக் கவனிப்பதைத் தாண்டி காலனிகளுக்குக் கட்சிகள் என்னென்ன செய்துள்ளன? அங்கே என்ன நடக்கிறது? இவறறைப் பற்றி அறிய சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில், சேலத்திலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள காந்திபுரம் காலனிக்குள் நுழைந்தோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நாடு பல தேர்தல்களையும் தலைவர்களையும் கண்டும் கூட இது போன்ற பல காலனி மக்கள் நிலை உயரவில்லை என்பது வருத்தம் தரக்கூடியதுதான்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!