செப்டம்பரில் தனது பருவகாலச் சடங்கான, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் விழாவை கடந்த வாரம் முன்னெடுத்தது அமேசான். (Amazon Fall 2023 Launch Event) இந்த முறை பெரும்பாலான தனது புதிய தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவை புகுத்தியிருக்கிறது. LLM (Large Language Model) எனப்படும் தீவிரச் செயற்கை நுண்ணறிவு...
Tag - அறிவியல்-தொழில்நுட்பம்
வேலைப்பளு வாட்டியெடுத்துக்கொண்டிருந்த ஒரு நாளில், `வாழ்க்கை இப்படியே அலுவலக மேஜையோடேயே போய்விடுமா, இதர தனிவாழ்வுத் திட்டங்களை எப்படித் தீர்ப்பது, இல்லை பழையபடியே துபாய்க்குப் போய், வாரம் நான்கு நாள்கள் வேலை பார்த்து, வரியில்லாச் சம்பளம் வாங்கலாமா, ராகு கேதுப் பெயர்ச்சி வேறு வருகின்தே` என்று பல்வேறு...
புலன்களின் மூலம் நாம் உலகை உணர்கிறோம். நாம் காணும் உலகம், புலன்களிலிருந்து பெறும் தகவல்களைக் கொண்டு நமது மூளை உருவாக்கும் ஒரு பிம்பம். வேறொரு விலங்குக்கு இதே உலகம் பிரிதொன்றாய்த் தெரியலாம். அது அவ்விலங்குக்கான ரியாலிட்டி. மனித குலம் தோன்றிய காலம் தொட்டே, தன் அகக்கண்ணில் விரியும் ஒன்றை...
கடந்த பத்தாண்டுகளில் கூட முன்பின் தெரியாத இடத்துக்கு, முதல் முறையாகச் செல்லும்போது ‘பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ என்று கந்தரலங்காரத்தை மனத்துக்குள் சொல்லிக்கொண்டு, அட்ரஸை துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு வீடு வீடாகக் கேட்டுச்சென்று கொண்டிருந்தோம். அந்த நிலையை மாற்றியது...
உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனிலேயே எல்லாமும் கிடைக்கிறது. ஆயினும் ஊர் சுற்றக் கிளம்பும் சுற்றுலா என்றாலே அனைவருக்கும் ஆனந்தம் தான். நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து பூமிப்பந்தின் எந்தவொரு புள்ளிக்கும் சென்று வருவது முன்பிருந்ததை விட எளிமையாகியிருக்கிறது. ஆகவே சுற்றுலாக்கள்...
இந்தியாவுக்கு முதலிடம். உக்ரைன் இரண்டாமிடத்தில். தென் ஆப்ரிக்கா மூன்றாவது. “என்னவாயிருக்கும்?…” என்றுதானே யோசிக்கிறீர்கள்.? உலகெங்கிலுமுள்ள நாடுகளில் மக்கள் சமைப்பதற்காகச் சராசரியாக எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்றொரு ஆராய்ச்சி நடத்தியிருக்கின்றனர். சாப்பிட அல்ல மக்களே… சமைக்க. அந்தப்...
தகவல் தொழிநுட்பம் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தி வருகிறது. அவ்வாறிருக்கையில் விவசாயம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? சொல்லப்போனால் சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தால் பெரும் பலன் அடைந்துள்ள துறைகளில் ஒன்று விவசாயம். அதிலும் மிகவேகமாய் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத்...
கேய்ஸன் (kaizen) என்கிற ஒரு ஜப்பானிய வார்த்தைக்கோவை மேலாண்மைப் பாடங்களில் மிகப்பிரசித்தமானது. தொடர்ந்த முன்னேற்றம் (continuous improvement) என்பது அதன் மறைபொருள். எந்தச் செயலாயினும், உற்பத்தியாயினும், இலக்காயினும் அதனைத் தொடர்ச்சியான மேம்படுத்தல்களின் மூலம் சிறப்புறச் செய்துகொண்டே இருப்பது...
மனிதனுக்கு, வாழ்வின் இளைய பருவத்தில் தனக்குப் பிடித்த பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுத்து, ப்ரபோஸ் செய்யலாமா, அவள் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வருவாளா என்ற சிக்கலில் தொடங்கி எந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலை கிடைக்கும் என்பதுவரை குழப்பங்கள் தொடர்கின்றன. போலவே முதுமையில் தூக்கம் வராதபோது...
அமேசான், ஒரு புதிய தொழில்நுட்ப செயற்கைக்கோளை ஏவத் தயாராகிக்கொண்டிருக்கிறது. தொலைத்தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சகாப்தத்தில், அமேசான் உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய கவரேஜை வழங்குவதற்கான ஓர் அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுகிறது. இதன் மூலம் இத்துறையில் ஒரு...