Home » டிஜிட்டல் மணிமேகலை
அறிவியல்-தொழில்நுட்பம்

டிஜிட்டல் மணிமேகலை

இந்தியாவுக்கு முதலிடம். உக்ரைன் இரண்டாமிடத்தில். தென் ஆப்ரிக்கா மூன்றாவது.

“என்னவாயிருக்கும்?…” என்றுதானே யோசிக்கிறீர்கள்.?

உலகெங்கிலுமுள்ள நாடுகளில் மக்கள் சமைப்பதற்காகச் சராசரியாக எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்றொரு ஆராய்ச்சி நடத்தியிருக்கின்றனர். சாப்பிட அல்ல மக்களே… சமைக்க.

அந்தப் பட்டியலின் முதல் மூன்று நாடுகள்தான் இந்தியா, உக்ரைன், தெஆ. ஆகியவை. இந்தியர்கள் வாரத்திற்கு 13.2 மணி நேரம், உக்ரைன்காரர்கள் ஜஸ்ட் மிஸ் 13.1 (போருக்கு முன்புதான். என்ன சமைப்பார்கள் என்பதையெல்லாம் வினுலாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்). தென் ஆப்ரிக்கர்கள் 9.5.

சமைத்துச் சாப்பிடுவது என்பது வெறுமனே ருசி மட்டுமே சார்ந்ததன்று. சமைத்த உணவைச் சாப்பிடத் தொடங்கியதே மனிதன் நோய்களிலிருந்து தப்பித்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வழி செய்தது. ஆயுட்காலம் அதிகரித்ததாலேயே மனிதகுலம் இன்றிருக்கும் நிலையை அடைய நேர்ந்திருக்கிறது.

சில காலம் முன்புவரைகூடச் சமையலும், அது சார்ந்த அடுப்பங்கரையும் பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்பது போலக் கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களில் இந்நிலைமை மாறியுள்ளது. மேற்படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்கள், வெளிநாடுகளில் தனியாகத் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சமைக்கத் தெரிந்திருப்பது மிக முக்கியத் திறனாக மாறியிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!