Home » கல்வி

Tag - கல்வி

கல்வி

பிளஸ் டூவுக்குப் பிறகு: உருப்பட ஓராயிரம் வழிகள்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரப் போகின்றன. மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடைய சிந்தனை அடுத்து என்ன படிக்கலாம் என்பதாகத்தான் இருக்கும். அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுடைய பொதுவான அடுத்த இலக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பாகத்தான் இருக்கும். இவ்விரண்டு...

Read More
கல்வி

ப்ளஸ் டூவுக்குப் பிறகு: கல்விக் கடன் பெறும் வழிகள்

வித்யா லட்சுமி, ஜன் சமர்த் – கல்லூரிப் படிப்புக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு பெயர்கள் இவை. பெரும்பாலான மத்தியத்தர வர்க்கத்தின் கனவு, தங்கள் பிள்ளைகளை ஒரு ‘உயர்ரக’க் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைப்பதுதான். உயர்ரகக் கல்லூரி...

Read More
உரு தொடரும்

உரு – 2

சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...

Read More
பெண்கள்

‘புரிய வைப்பதுதான் பெரிய பிரச்னை!’ – நம்ரதா பாலி

இந்தியாவில் நூற்றைம்பது மில்லியன் முறைசாராப் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு, தினச் சம்பளம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்த ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை. அனைத்து வகைகளிலும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்...

Read More
கல்வி

குரூப் 4 குஸ்தி மைதானம்

சமீபத்தில் தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு  ஒரு பேசுபொருளானது. அரசியல் கிடக்கட்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தப் போட்டித் தேர்வில் வென்று ஓர் அரசு வேலையைப் பெறுவது எளிதா? சிரமமா? குரூப்-II, குரூப்-I தேர்வுகள் பிரிலிம்ஸ், மெய்ன்ஸ், இன்டர்வியூ என்று மூன்று படிநிலைகளைக் கொண்டவை...

Read More
கல்வி

மணற்கேணி: கல்விக்கொரு செயலி

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிப் பாடங்களைக் காணொளி வழியாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ‘மணற்கேணி’ என்ற செயலியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை. ஜூலை மாதம் இருபத்தைந்தாம் தேதி தாம்பரத்தை அடுத்த சேலையூர் அரசு...

Read More
கல்வி

பன்னாட்டு பிராண்ட் ஆகும் சென்னை ஐஐடி!

இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் மாணவர்களில் அனேகமானோரின் கனவு ஏதாவது ஒரு ஐஐடி காலேஜில் படிக்க வேண்டும் என்பதே. அதற்கான தேர்வுப் பரீட்சைகளுக்குத் தயாராகப் பல வருடங்களாகப் பெற்றோரும் மாணவர்களும் உழைக்கிறார்கள். ஐஐடி எனும் பிராண்ட் இந்தியாவில் மட்டுமல்ல… உலகெங்கும்...

Read More
உலகம்

உக்ரைன்: தொலைந்து போன கனவுகள்

பால்முகம் மாறா, சிரித்த முகம் கொண்ட கிலியெப் (8 வயது). சுருட்டை முடியுடன் சற்றே வளர்ந்த எவோர் (10 வயது). இருவருக்கும் கிடைத்த பொறுப்பான அண்ணன் டிமஃபி (11 வயது). மூவருக்கும் ஓயாமல் சண்டை, கைபேசிக்காக. பப்ஜி விளையாட அல்ல, படிப்பதற்கு. போரின் உபயத்தால் பள்ளிப் பாடங்கள் அனைத்தும் இதன் மூலமே. சண்டையும்...

Read More
கல்வி

பைஜுஸ்: சரியும் கல்விக் கோட்டை

‘குளிர்காலத்தின் ஆழங்களில்தான், யாராலும் வெல்ல முடியாத ஒரு கோடை எனக்குள் இருப்பதை நான் கண்டு கொண்டேன்’ ஆல்பர்ட் காம்யூ வின் மிகப் பிரபலமான வாசகம் இது. பைஜுஸ் நிறுவனத் தலைவர் பைஜூ ரவீந்திரன், தன் ஊழியர்களுக்குச் சென்ற செப்டம்பர் மாதத்தில் விடுத்த செய்தியில் இவ்வாசகம் இடம்பெற்றிருந்தது. இப்போது...

Read More
உலகம்

சிக்கல் சிங்காரவேலர்களின் கதை

பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!