உலகவாசிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ஒன்று என்றால், சீனர்களுக்கு மட்டும் அது இல்லை. ஏனென்றால் சீனர்களின் ஆண்டு 354 நாட்கள் கொண்டது. நம்மவர்கள் நட்சத்திரப்படி பிறந்ததினம் கொண்டாடுவதைப் போல, சீனர்களுக்குப் புத்தாண்டு தினமானது ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி நடுவில் ஏதோ ஒரு தினம்...
Tag - உலகம்
சென்ற வாரம் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் லிபியாவுக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதென்னடா புதிய நல்லுறவு என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லிபியாவுக்கும் அமெரிக்காவும் ஆதி முதல் ஏழாம் பொருத்தம் என்பது அண்ட...
நமது நாட்டில் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதெல்லாம் மிகவும் எளிதான செயல். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி யாரைக் கைகாட்டுகிறதோ அவரே சபாநாயகர். ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல. பதினைந்து முறை வாக்களிக்க வேண்டும். விளையாட்டல்ல. உண்மையாகவே. ஏன் 15 முறை வாக்களிப்பு? எதனால் இத்தனை...
“நிலைமை கைமீறிப் போய்விட்டது. எல்லா சத்திர சிகிச்சைகளும் கால வரையறையின்றிப் பிற்போடப்படுகின்றன” தீயாய்ப் பரவுகிறது அந்தக் குறுஞ்செய்தி. பேராதனை போதனா மருத்துவமனையில் பணிப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களில் பவனி வருகிறது அறிக்கை. ஏற்கனவே, கொதிக்கும் எண்ணெய்த் தாழியிலிருந்த தேசம்...
டியாகோ மரடோனாவின் திருமுகமும், பந்தைக் கடத்திக் கொண்டு ஓடும் லயனல் மெஸ்ஸியின் மின்னல் வேகக் கால்களும், மூன்று முறை உலக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டிகளை வென்ற மகத்தான தருணங்களுமே ஆர்ஜென்டீனா என்றதும் உலக ஜனத்தொகையில் பாதிப் பேருக்குச் சட்டென்று ஞாபகத்தில் வந்து குவியும். ஆனால் கடந்த ஏழு தசாப்த காலமாய்...
நீரின்றி வாழ்வில்லை. அதனால்தான் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வாதாரத்துக்கான அடிப்படைத் தேவையான நீர் இருக்கிறதா என்று தேடுகிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். நாம் வாழ்வது ஆறும் ஏரிகளும் தெளிந்த நீரோடைகளும் சூழ் உலகம் ஆனாலும் குடிக்கச் சுத்தமான குடிநீர் இல்லை என்ற புலம்பல்கள் சமீப காலமாக அதிகரித்து...
உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில், பண்டிகைக்காக எல்லாரும் கூடி இருக்கும் போது, பல பேருந்துகள் நிரம்பிவழிய எதிர்பாராத விருந்தினர்கள் வந்தால் நாம் அடையும் அதிர்ச்சிக்கே அளவில்லை. அதே வருபவர்கள் விருந்தினர்களாக அல்லாமல், வீடும் நாடும் இல்லாமல் பசியும் பஞ்சமும் நிறைந்த மனிதர்களாக இருந்தால் எப்படி...
உங்களுக்கு மஹ்சா அமினியை நினைவிருக்கிறதுதானே..? சில மாதங்களுக்கு முன் இருபத்திரண்டு வயதான, குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் மஹ்சா அமினி, அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமினி, உயிரற்றவராகத்தான் வீட்டுக்குத் திரும்பினார். அதைத் தொடர்ந்து, அங்கும் இங்கும் பல போராட்டங்கள்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2022ம் ஆண்டு எப்படி இருந்தது? பெரிய அதிரடிகள், கவலைகொள்ளத்தக்க நிகழ்வுகள் ஏதுமில்லை என்றாலும் வானளாவப் புகழ்ந்துகொண்டாடவும் ஒன்றுமில்லை. கோவிட் பயம் சற்றே வடிந்த ஆண்டு என்பதால் உலகெங்கும் இருந்த அந்த உற்சாகப் பரபரப்பு இங்கும் இருந்தது. * அமீரகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக...
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி லண்டன் மாநகரில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய வெப்பநிலை 16.3 பாகை செல்சியஸ். வெப்பநிலைப் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவே புத்தாண்டு தினத்தன்று பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய வெப்ப நிலை. இப்படியாக 2022-ம் ஆண்டின் முதலாவது நாளே ஒரு சரித்திர...