நமது நாட்டில் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதெல்லாம் மிகவும் எளிதான செயல். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி யாரைக் கைகாட்டுகிறதோ அவரே சபாநாயகர். ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல. பதினைந்து முறை வாக்களிக்க வேண்டும். விளையாட்டல்ல. உண்மையாகவே. ஏன் 15 முறை வாக்களிப்பு? எதனால் இத்தனை சுற்றிவளைப்பு என்பதைப் புரிந்துகொள்ள அமெரிக்க அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
2. அணைத்துக்கொண்ட கங்கை 1896ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் குடியேறியிருந்த இந்தியர்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தி, அந்தப்...
2. பாதம் தொட்டவன் அவன் தன்னை துவன்யன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ஏழு-ஏழரை அடி உயரமும் மணலின் நிறமும் கட்டுறுதி மிக்க உடலும் கொண்டவனாக இருந்தான்...
‘தலைமுறை புரிந்து கொள்ளல்’ என்ற சொல்லாடலை நான் பயன்படுத்த விரும்புகிறேன். இந்த முதல் வரிக்கான காரணத்தை இறுதியில் சொல்கிறேன். அமெரிக்காவின் கூட்டு ஜனநாயகமும் இந்தியாவின் கூட்டு ஜனநாயகமும் வெவ்வேறானவை, முரண்பாடானவை. அமெரிக்கா உண்மையில் ‘குடியேற்றக் காலனி’களின் குடும்பம். அதனால் தான் அதற்கென்று தனிப் பெயரில்லாமல் ‘யுனைட்டட் ஸ்ட்டேட்ஸ் ஆப் அமெரிக்க’ என்றழைக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளின் அதிகாரங்கள் தனித்தனியே செயல்படுவது அவர்களுக்குள் சண்டையும், ஆக்கிரமிப்பும் குரோதமும் வளர்வதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதாலேயே ஒரு குழுவாக இணைந்து மைய அதிகாரத்தைக் கூட்டுத் தலைமைக்குக் கொடுப்பது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. அதுவே USA(United States of America) என்றானது. உற்றுக் கவனித்தால் காலனிகளே மாகானங்கள் என்றழைக்கப் படுவது தெரியும். ஒவ்வொரு மாகானமும் வெவ்வேறு நாடுகளின் காலனிகளாக உருவானவை என்பதால் அனைத்து நாடுகளின் கலாச்சாரமும் கலந்த கலந்த கலவையாகவும், அந்தந்த மாகானத்தின் உரிமையின்(ஆரம்பத்தில் அந்த நாட்டுக்கான உரிமை) தாக்கமே கட்டுரையில் சொல்லப்படும் அதிகாரப் பரவலுக்கு முக்கிய காரணம்.
ஆனால், இந்தியா அப்படியல்ல. இந்திய மாகானங்கள் எந்த நாட்டின் ஆக்கிரமிப்பாலும் உருவானவை அல்ல. இந்தியாவையே ஆக்கிரமிக்க நினைத்த நாடுகளின் தாக்கம் ஆங்காங்கே இருந்தாலும், அவற்றின் தாக்கம் அமெரிக்காவில் இருப்பது போல் இருக்காது. அதனாலேயே, ‘மாநில சுயாட்சி’ என்பது அடிக்கடி பேசப்பட்டாலும் பெரிதாகப் பேசப் படுவதில்லை. ‘ஒன்றிய அரசு’ என்ற வாதமும் மக்களிடையே(நாடு முழுவதும்) பெரிதாக எடுத்துக் கொள்ளப் படாததற்குக் காரணம் அதுவே. இதைத்தான் இரு நாடுகளுக்குள் இருக்கும் முரண் என்று நான் குறிப்பிட்டேன்.
நிற்க. முதல் வரிக்கான காரணம் இதுதான். இன்றைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் முறையாக சரித்திரத்தைச் சொல்லிக் கொடுப்பதில்லை. சான்றாக, இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் கட்சி காமராஜர் இருந்த காங்கிரஸ் கட்சி அல்ல. அந்த காங்கிரஸிலிருந்து பிரிந்து தோன்றிய ‘இந்திரா காங்கிரஸ்’ தான் தற்போதைய காங்கிரஸ் கட்சி. காமராஜர் இறந்த பிறகு அப்போதிருந்த ‘பழைய காங்கிரஸ்’ தலைவருக்குக் கவர்னர் பதவி கொடுத்து தன் கட்சியை அதனுடன் இணைத்தார் மறைந்த தலைவர் இந்திரா காந்தி. வழக்கமாக இணையும் கட்சியின் பெயரே இணைந்த பின்னர் கட்சியின் பெயராக இருக்கும். ஆனால், பழைய காங்கிரஸின் ஏராளமான சொத்துக்கள் காரணமாக தான் ஏற்படுத்திய கட்சியின் பெயரை விட்டுக் கொடுத்தார் இந்திரா காந்தி. அதன் பின் பழைய காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சிப் பணிகளிலிருந்தி விலகினர். மூப்பனார் தனிக் கட்சி ஆரம்பித்துத் தன்னை நிரூபித்துப் பின்னர் அவரும் காங்கிரஸில் இணைந்து பின் தற்போது மீண்டும் தனிக் கட்சியாக இயங்குகிறது.
இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், தலைமுறைகள் மாறும் போது பழைய சரித்திரத்தை முதியவர்கள் நிகழும் தலைமுறைக்குக் கடத்துவதில்லை என்பதுதான். ‘இது அரசியல் ல சகஜமப்பா’ என்பது போல் அமெரிக்கா பற்றிய புரிதலும் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
அமெரிக்காவில் பொதுமக்கள் அப்படி இப்படி இருப்பார்கள். ஆனால் தலைமைப்பதவியில் இருப்பவர்கள் நடத்தையில் கேள்வி எழுவது போல் ஏதாவது நடந்து விட்டால் அவ்வளவுதான். நம் நாட்டில் நிலைமை தலைகீழ்.
– இப்படி பொதுவான கருத்து நம்மிடையே உலவி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் அதிபர் என்றாலும் எப்படி கேள்வி கேட்க முடிகிறது? என்ற அரசியல் நிலைகளை தெளிவாக விளக்கியது இந்த கட்டுரை.