அயோத்தி எப்படி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உரிமை கொண்டாடும் கலவர பூமியாக இருக்கிறதோ, காஷ்மீர் எப்படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே தீராப்பிரச்னையாக இருக்கிறதோ/ இருந்ததோ அதேபோல ஜெருசலமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தினியாவிற்கும் இடையே ஒரு தலைவலி. மதங்களால் அன்பு பரவுகிறதோ இல்லையோ, மத...
Tag - அமெரிக்கா
தமது குடும்பத்தின் வரலாறு பெரும்பாலானோருக்கு அதிகபட்சம் மூன்று தலைமுறை வரைக்கும்தான் தெரியும். பொருளாதாரத் தேவையின் காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் புலம்பெயரும் சூழ்நிலை. பிறந்த ஊருக்குச் செல்வதே அரிது என்றானபோது முன்னோர்களைப் பற்றி மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும். முன்னோர்கள்...
இந்தியாவில் திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது பரவலாகி வருகிறது. அதனை ஒப்புக்கொள்ளாத பலர், கலாசாரத்துக்கு இழுக்கு எனக் குறை சொல்லும் முந்தைய தலைமுறையினர். அவர்கள் குற்றம் சாட்டுவது மேற்கத்திய நாகரிகத்தினை. பொதுவாகவே அமெரிக்காவில் வசிக்கும் பலருக்குமே அமெரிக்கக் கலாசாரத்தைப் பற்றிய தவறான புரிதலும்...
வான்வெளியில் மணிக்கு 70 மைல் வேகத்தில் ஒரு பலூன் பறந்துகொண்டிருக்கிறது. வண்ணமயமான பலூன்கள் பறப்பது கண்ணுக்கு அழகு! ஆனால் இவை உலோகங்களால் செய்யப்பட்ட, வேவு பார்க்கும் அண்டைநாட்டுப் பலூன்கள். சுட்டுப் பொசுக்கவும் முடியாது. ஏனெனில், கீழே விழும் துகள்கள் மக்களுக்கு அபாயத்தை உண்டு பண்ணக்கூடியவை, ஆனால்...
உலகப் பணக்காரர்களில் ஒருவர் இமாலயப் பிரதேசத்தில் இமய மலையின் அடிவாரத்திலுள்ள கிராமங்களில் ஒன்று அது. 1950களின் பிற்பகுதியில் மின்சார வசதியோ அல்லது குடிநீர் வசதியோ வீடுகளில் இல்லை. அங்கு ஒரு சராசரி விவசாயக் குடும்பம். தாய் தந்தையர் இருவரும் பள்ளிக்கூடம் போய்ப் படித்ததில்லை. காரணம் அவர்கள்...
காவல் துறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது. சாலையோர ரோந்துப் பணி, துப்பறியும் பணி, போதைப்பொருட்கள் தடுக்கும் குழு, திறனாய்வுக்குழு, கல்விக்குழு மற்றும் சட்டதிட்ட ஆலோசகர்கள் குழு, கொள்கைகள் குழு சமூகப் பணிக் குழு, இதைத்தவிர மக்கள் பணிக்குழு எல்லாம் உள்ளடக்கியதே காவலர் துறை. இரட்டைக்கோபுரங்கள்...
தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தும், படி ஏறியிறங்கும் போது மூச்சிரைத்தும், புற்றுநோய் என்று ஒரு நாள் மருத்துவர் சொல்லும் போது அதிர்ச்சி வந்து, ‘எனக்கா...
சென்ற வாரம் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் லிபியாவுக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதென்னடா புதிய நல்லுறவு என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லிபியாவுக்கும் அமெரிக்காவும் ஆதி முதல் ஏழாம் பொருத்தம் என்பது அண்ட...
நமது நாட்டில் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதெல்லாம் மிகவும் எளிதான செயல். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி யாரைக் கைகாட்டுகிறதோ அவரே சபாநாயகர். ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல. பதினைந்து முறை வாக்களிக்க வேண்டும். விளையாட்டல்ல. உண்மையாகவே. ஏன் 15 முறை வாக்களிப்பு? எதனால் இத்தனை...
நீரின்றி வாழ்வில்லை. அதனால்தான் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வாதாரத்துக்கான அடிப்படைத் தேவையான நீர் இருக்கிறதா என்று தேடுகிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். நாம் வாழ்வது ஆறும் ஏரிகளும் தெளிந்த நீரோடைகளும் சூழ் உலகம் ஆனாலும் குடிக்கச் சுத்தமான குடிநீர் இல்லை என்ற புலம்பல்கள் சமீப காலமாக அதிகரித்து...