Home » உலகம் » Page 3

Tag - உலகம்

உலகம்

மியான்மர்: மூளுமா உள்நாட்டு யுத்தம்?

மியான்மர் ராணுவ அரசு கட்டாய ராணுவச் சேவை திட்டத்தை ஏப்ரல் முதல் செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆள் சேர்ப்புப் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இம்மாதிரித் திட்டம் நடைமுறையில் உள்ளதுதான். பெரும்பான்மை மியான்மர் மக்கள் இந்த அரசைத் தங்கள் சட்டப்படியான அரசாகக்...

Read More
உலகம்

உக்ரைன் எனும் பலியாடு

ஒரு முட்டாளுக்கு வழிகாட்டி, சிறகுகளையும் தந்துவிட்டால், அவனது முன்னேற்றம் உறுதி. குண்டுகளில்கூட கெட்டிக்காரக் குண்டுகள், முட்டாள் குண்டுகள் என்று உண்டு. விமானத்திலிருந்து வீசப்பட்ட பின்பு எந்தக் கட்டுப்பாடுமின்றி, தன்பாட்டுக்கு நினைத்த இடத்தில விழுபவை முட்டாள் குண்டுகள். ஒரு முட்டாள் குண்டிற்கு...

Read More
உலகம்

(வாக்குச்) சீட்டுள்ளவர் யோசிக்கக் கடவர்!

சோழர் காலக் குடவோலை முறை தொடங்கி மின்னணு வாக்கு வரையான காலம் வரை மக்களாட்சியின் மகத்துவமே, மக்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த  ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவதுதான். இவரால் நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் ஒருவரை அல்லது ஒரு கட்சியை ஆட்சி செய்ய...

Read More
ஆளுமை

கிறிஸ்டோபர் நோலன்: ஆஸ்கரும் அதற்கு அப்பாலும்

பிறப்பும் இறப்பும் மட்டும் மனிதனின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே காரணத்தால்தான் கடவுள் இன்றும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கூடவே அவரது படைத்தல் காத்தல் கடமை சார்ந்த நம்பிக்கைகளும். அழித்தல்? ம்ஹும். அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து அந்தப் பணியில் இருந்து கடவுளை அகற்றிவிட்டோம்...

Read More
உலகம்

காஸாவில் அமெரிக்கா: உதவியா? உபத்திரவமா?

காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...

Read More
கிருமி

மீண்டும் வருமா ப்ளேக்? – ஓர் அகழ்வாராய்ச்சி அதிர்ச்சி

அகழ்வாராய்ச்சிகளில் திகைப்பூட்டக்கூடிய ஏதாவது அகப்படுவது வழக்கம்தான். சமீபத்தில், தெற்கு ஜெர்மானிய நகரமான நியூரம்பெர்க்கில் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஓரிடத்தைக் குறி வைத்து அகழ்ந்தார்கள். அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட  எலும்புக் கூடுகளையும், சில சடலங்களின் மிச்சங்களையும்கூடக்...

Read More
உலகம்

எல்லை வகுத்து ஏமாறுங்கள்!

“ரஷ்யாவின் அழகான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருக்கிறேன். இங்கு மனதை வருடும் தென்றல் வீசுகிறது, அதிக வெப்பமோ, குளிரோ இல்லை. என்னைச் சுற்றி மக்கள் இயல்பாக நடமாடுவதை நீங்களே பார்க்கிறீர்கள். போர் நடப்பதெல்லாம் உக்ரைன் எல்லையில் மட்டுமே. ஊருக்குள் ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கிருந்து பின்லாந்து...

Read More
உலகம்

ஆளப்போகும் தாத்தா யார்?

ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் உடற்பயிற்சி நிலையங்கள் பொங்கி வழியும் எல்லா இயந்திரங்களிலும் உற்சாகமாக யாரேனும் ஓடிக்கொண்டோ நடந்துகொண்டோ இருப்பார்கள். நாள் முழுக்க இயந்திரங்களைப் பயன்படுத்தக் காத்திருப்போர் பட்டியலும் அனுமார் வால் போல நீண்டிருக்கும். அடுத்துவரும் சில நாட்களும் வாரங்களும் கூட...

Read More
உலகம்

உணவுப் பெட்டியில் எமன்

பாராசூட்டில் பறந்து வந்த உணவுப் பொருள்கள் அடங்கிய பிரம்மாண்டப் பெட்டி காஸா அகதி முகாம் வீடு ஒன்றின் மீது விழுந்ததில் உள்ளிருந்தோர் இறந்தனர். பாராசூட் மெதுவாகத் தரையிறங்கித்தான் கீழே நிற்கும். உணவுப் பெட்டிகளைத் தாங்கி வந்த ஏழெட்டுப் பாராசூட்கள் என்ன காரணத்தினாலோ விரியாமல் போயின. இதனால், உணவுப்...

Read More
உலகம்

காஸா: பசிப் படுகொலை

உதவி ட்ரக்குகளில் உணவு வாங்குவதற்குக் கூடிய பாலஸ்தீனிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றிருக்கிறது இஸ்ரேல் படை. வடக்கு காஸா வரை உதவி ட்ரக்குகள் வருவதில்லை. காஸாவின் உள்ளே உதவிகளைக் கொண்டு சேர்ப்பதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் வாதப் போர் நடத்த வேண்டியிருக்கிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!