“என் சிறு இதயம் ஒரு மில்லியன் துண்டுகளாக உடைந்து விட்டது” எனப் பின்னூட்டமிட்டிருந்தார் ஒரு பெண். இதயத்தில் அவ்வளவு வலி தரக்கூடியது அந்த வீடியோ. வகுப்பறையொன்றில் முக்காடணிந்த பெண்கள் சுமார் முப்பது பேர். ‘ஓ’ வென்று வித்தியாசமான ராகத்தில் மேசைகளில் முகம் புதைத்து அழுகிறார்கள். தலை முதல் கால் வரை...
Tag - உலகம்
ஒரு காலத்தில் புகழுடனும், அதிகாரமிடுக்குடனும் திகழ்ந்த ஆசியாக் கண்டத்தின் அரசியல்வாதிகளின் கடைசிக்காலம் பெரும்பாலும் பரிதாபமானது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என்ற திரை வசனத்திற்கு உயிரளித்துவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள் பலர். இந்தப் பட்டியலில் மிக அண்மையில் இணைந்து...
சீக்கிரமே இந்த உலகை விட்டுச் சென்றிருந்த சிறுமலர்களுக்கு, அவர்களுக்கு பிடித்தமான பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்துகிறார். “அப்பாவி குழந்தைகள் தான் போரினால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள். மிகுந்த மன வேதனையைத் தரும் உண்மை இது. இனியும் நேரத்தை வீணடிக்காமல், இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெளிவரப்...
ஆடல், பாடல், பலூன்கள், கொண்டாட்டம். அமெரிக்கக் கட்சி மாநாடுகள் களைகட்டும் மாதம் இது. அமெரிக்கத் தேர்தலில் பரப்புரைகள், விவாத மேடைகள் தவிர, கட்சி மாநாடு மிக முக்கியமானது. கட்சியின் முதன்மையான தலைவர்கள் நேரில் வந்து தங்களின் ஆதரவைத் தங்கள் கட்சி வேட்பாளருக்கு உறுதி செய்வார்கள். அதற்குப் பிறகே அதிபர்...
அரசியல் சூழல்களால் பல்வேறு அரசியல் தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிய சம்பவங்கள் வரலாறெங்கும் நடந்திருக்கின்றன. தற்போதைய வங்கதேச அரசியல் சூழ்நிலையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசியல் சூழ்ச்சிகளும் மக்கள் போராட்டங்களும் மட்டுமல்ல, தலைக்கேறிய அதிகார போதையும் இத்தகைய சில சம்பவங்களுக்குக் காரணமாக...
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கச்சேரிக்கான சகல ஏற்பாடுகளும் ஆகஸ்ட் 15ம் தேதி வேட்பு மனுத்தாக்கலுடன் ஆரம்பமாகிவிட்டன. மொத்தம் முப்பத்தொன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எதற்கு இத்தனை பேர் என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? அப்படித்தான். தேர்தல் திணைக்களத்தைக் கடக்கும் போது பையில் ஐம்பதாயிரம் காசு...
தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகிக் கொண்டு வரும் அமெரிக்காவில், இரண்டு கட்சி வேட்பாளர்களின் பார்வையும் பன்னாட்டு மாணவர்களின் குடியுரிமையில் படிந்திருக்கிறது. வாக்குரிமையே இல்லாத மாணவர்களின் கடவுச்சீட்டுச் சிக்கல், எதனால் தேர்தல் பரப்புரையில் ஒரு முக்கிய பேசுபொருளானது? ஐக்கிய அமெரிக்காவின் உயர் கல்வி...
நைஜீரியக் கொடி வெள்ளையும் பச்சையுமாக இருக்கும். உள்நாட்டுப் போராட்டத்தில் வெள்ளையும் நீலமும் சிகப்பும் கலந்த ரஷ்ய நாட்டுக் கொடியைப் பிடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள் சிலர். எதிர்பார்த்ததை விடக் கூடுதல் கவனம் கிடைத்து தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில்...
விவாத மேடையின்றி, பரப்புரை இன்றி, நிதி திரட்டல் இன்றி அதிபர் வேட்பாளராகிவிட்டார் கமலா ஹாரிஸ். அவரோடு சேர்ந்து அமெரிக்காவை வழிநடத்தத் துணை அதிபர் வேட்பாளரைத் தேடும் வேலை மிச்சம் இருந்தது. தனக்கு இணையாகத் தன் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் ஒருவரை, ராகமும் தாளமுமாக இணைந்து செயல்படும் ஒருவரைத்...
கூகுள் மிகப்பெரும் பொருட்செலவில் தனது செயலிகளைப் பிரபல அலைபேசிகளில் வலுக்கட்டாயமாகத் திணித்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. தேடுபொறி மற்றும் விளம்பரங்களில் வெகு பிரத்தியேகமாகத் தன்னை முன்னிறுத்தும் விதமாகக் கூகுள் செயல்பட்டது என்பது குற்றச்சாட்டு. கிட்டத்தட்ட பத்து மாதங்கள் நடந்த இந்த முக்கியமான...