Home » கலவரமா? ஏறு, ஹெலிகாப்டரில்!
உலகம்

கலவரமா? ஏறு, ஹெலிகாப்டரில்!

அரசியல் சூழல்களால் பல்வேறு அரசியல் தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிய சம்பவங்கள் வரலாறெங்கும் நடந்திருக்கின்றன. தற்போதைய வங்கதேச அரசியல் சூழ்நிலையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசியல் சூழ்ச்சிகளும் மக்கள் போராட்டங்களும் மட்டுமல்ல, தலைக்கேறிய அதிகார போதையும் இத்தகைய சில சம்பவங்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. அப்படி நாட்டை விட்டுத் தப்பிய சில தலைவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

தலாய்லாமா: திபெத்

புத்த மதத் துறவி. திபெத் நாட்டின் குடிமகன். திபெத்தியப் புத்த மதத்தின்படி அவர்களது குருவை தலாய்லாமா என அழைப்பது வழக்கம். அதுவே தற்போதைய தலாய்லாமாவின் பெயராகவும் வரலாற்றில் நிலைத்துவிட்டது. இப்போது நமக்கு நன்கு பரிச்சயமுள்ள 14வது தலாய்லாமாவின் இயற்பெயர் டென்சின் யாட்ஷோ (Tenzin Gyatso). இளம் வயதில் மதத் தலைவராக இருந்தவர். பதினைந்தே வயதில் அதிகாரம் மிக்க அரசியல் தலைவராகவும் மக்களின் பேராதரவோடு பதவியேற்றுக்கொண்டார்.

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு அருகில் ட்ரோமோ என்னும் இடத்தில் வசிக்கவும் அங்கிருந்தே திபெத்தை வழி நடத்தவும் தொடங்கினார். பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் திபெத் சீனாவின் ஒரு பகுதி எனத் தொடர்ந்து சொல்லி வந்தது சீனா. சீன அரசு அனுப்பியிருந்த குழுவொன்று அவரை ட்ரோமோவில் சந்தித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தது. அதை நம்பி அவர் லாசாவிற்குச் சென்றார். ஆனால் அங்கு நடந்ததோ வேறு. சீனா தன் ஆதிக்கப் போக்கை அதிகரிக்கத் தொடங்கியது. சீன-திபெத்தியர்களுக்கு இடையிலான மோதல் வலுப்பெறத் தொடங்கியது. இதன் காரணமாக தலாய்லாமா இமாச்சல் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வந்து வசிக்கத் தொடங்கிவிட்டார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் சுமூகமானத் தீர்வு ஏற்படாததால் இன்னும் இந்தப் பிரச்னைத் தொடர்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்