Home » பறந்து வா, படி!
உலகம்

பறந்து வா, படி!

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகிக் கொண்டு வரும் அமெரிக்காவில், இரண்டு கட்சி வேட்பாளர்களின் பார்வையும் பன்னாட்டு மாணவர்களின் குடியுரிமையில் படிந்திருக்கிறது. வாக்குரிமையே இல்லாத மாணவர்களின் கடவுச்சீட்டுச் சிக்கல், எதனால் தேர்தல் பரப்புரையில் ஒரு முக்கிய பேசுபொருளானது?

ஐக்கிய அமெரிக்காவின் உயர் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் உலகிலேயே தலை சிறந்தவை என்றால் அதில் பிறிதொரு கருத்துக்கு வாய்ப்பு குறைவு. வசதியும், வாய்ப்பும், சீரிய சிந்தனையும் தங்குதடையில்லா சுதந்தர போக்கும் உள்ள ஆய்வகங்களை வேறெங்கும் பார்ப்பதரிது!

அதிலும், உலகமயமாக்கப்பட்டபின், பயணங்களும் தொழில்நுட்பமும் உலகையே ஒரு கைப்பிடிக்குள் கொண்டுவந்தபின், வசதி படைத்த பலரும், தங்கள் பிள்ளைகளைப் படிக்க அமெரிக்காவிற்கு அனுப்புவது அதிகமாகிவிட்டது.

மாணவர்களுக்கான விசா உரிமை வேறு, படிப்பு முடிந்ததும் பணி செய்யத் தேவையான விசா வேறு. மாணவர்களுக்கான விசாவில் வரும் பலரும் இங்கேயே தங்கி வேலை செய்ய, அதற்கான விசா கிடைப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் பணி செய்யத் தேவையான விசா, மிகவும் குறைவான அளவே ஒதுக்கப்படுகிறது. அதுவும் நாடுவாரியாக. அதனால் படிப்பை முடித்த பல மாணவர்களே என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடி ஊர் திரும்பவும் முடியாமல் இன்னொரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

H-1B விசா பல நாடுகளிலிருந்து வந்து படிக்கிற மாணவர்களுக்கு இருக்கின்ற மிகவும் பயனுள்ள ஒரே குடியுரிமைப் பாதை. இந்த விசா, தகுதியான மாணவர்களையும் திறமையான பணியாளர்களையும் அயல்நாட்டிலிருந்து நேரடியாகப் பணிக்கு அமர்த்த, நிறுவனங்களுக்கு உதவுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்