பிறந்த ஊர் விருதுநகர். அடுத்த வேளை சோற்றுக்கு அந்தந்த நேரம் உழைத்தால் மட்டுமே வழி என்ற நிலையில் வாழ்ந்தது எங்கள் குடும்பம். அங்கிருந்து பிழைப்புத் தேடி தூங்கா நகரான மதுரைக்கு 1951-ஆம் ஆண்டுக் குடி பெயர்ந்தேன். தத்தனேரி என்றாலே சுடுகாடு என்றுதான் மதுரை மக்கள் நினைவுக்கு வரும். நான் வந்து சேர்ந்த...
Tag - ஆளுமை
பீதி, அது ஒன்று தான் அங்கிருந்த அத்தனை பேரிடமும் எஞ்சியிருந்த ஒரே உணர்வு. நேரமில்லை. யாராவது ஒருவரேனும் துணிந்து விவேகமாகவும் வேகமாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள் மரீனா. கைக்குக் கிட்டிய ஒரு தொலைபேசியிலிருந்து தன் உறவினரைத் தொடர்பு கொண்டு, அவர் மூலமாகத் தன் மாநிலத்தின் முதலமைச்சரிடம்...
எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிக் ஹங்கர்ஃபோர்ட் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவியிருக்கிறார். நட்மெக் முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் இவர். தன் மகள் எலிசபெத் பெயரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். நட்மெக் ஒரு முதலீட்டு ஆலோசனை...
பால்சன் வெண்ணெய். குஜராத்தின் ஆனந்த் பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு வெண்ணெய் நிறுவனம். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியச் சந்தையில் இவர்கள்தான் நம்பர் ஒன். ஏனென்றால் இருந்ததே ஒரே ஒரு வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம்தான்! தனிக்காட்டு ராஜா. இவர்கள் வைத்ததுதான் விலை. பால் பொருட்களை விற்கும் விவசாயிகளும்...
ஜூன் 24 எம்.எஸ்.வி-கண்ணதாசன் இருவருக்கும் பிறந்த நாள். இது, இரு மேதைகளையும் நினைவுகூர ஒரு சந்தர்ப்பம். 1949ம் ஆண்டு, ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘கன்னியின் காதலி’ படத்திற்கான இசையமைப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக...
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் கல்வி கற்று அமெரிக்காவில் குடியேறிய அஜய் பங்கா, வெள்ளிக்கிழமை, ஜூன் 2, 2023 உலக வங்கியின் 14வது தலைவரானார். எந்த நாடு, என்ன மதம், ஆள் யார், எப்படி என்றெல்லாம் பார்க்காமல், தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அமெரிக்காவில் எவ்வளவு வேண்டுமானாலும் உயர...
முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க எழுத்தாளர்கள் ஒன்று கூடினார்கள். (வில்லா கேதர், யூஜின் ஓ’நீல், ராபர்ட் ஃப்ரோஸ்ட், எலன் கிளாஸ்கோ, எட்வின் ஆர்லிங்டன் ராபின்சன், ராபர்ட் பெஞ்ச்லி.) சும்மா...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க். அவர் கடந்த ஆண்டு...
டோக்கியோவில் உள்ள ஒரு கல்லூரியில் சீனாவின் ஜாக் மா (அலிபாபா நிறுவனர்) வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார் என்கிற செய்தி கடந்த வாரம் பல வர்த்தகப் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்திருந்தன. மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவி, வளர்த்து, உலகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக்கிய ஒருவர் பாடம்...
300 படங்கள், வித விதமான பாத்திரங்கள். இருபது ஆண்டுகால கலைப் பயணம்! இருந்தாலும் ராமராகவும் கிருஷ்ணராகவுமே அதிகம் அறியப்பட்ட நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது ராமராவ் தான். ஆந்திர மக்கள் மட்டுமல்லாது தமிழக ரசிகர்களும் அந்த அளவு அவரைக் கொண்டாடினார்கள். அவரின் உருவத்திற்குக் கற்பூர ஆரத்தி எடுத்தல்...