Home » வெண்ணெய்ப் பாப்பாவும் விளம்பரப் புரட்சியும்
ஆளுமை

வெண்ணெய்ப் பாப்பாவும் விளம்பரப் புரட்சியும்

சில்வெஸ்டர் டாகுன்ஹா

பால்சன் வெண்ணெய். குஜராத்தின் ஆனந்த் பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு வெண்ணெய் நிறுவனம். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியச் சந்தையில் இவர்கள்தான் நம்பர் ஒன். ஏனென்றால் இருந்ததே ஒரே ஒரு வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம்தான்! தனிக்காட்டு ராஜா. இவர்கள் வைத்ததுதான் விலை. பால் பொருட்களை விற்கும் விவசாயிகளும் சரி… வாங்கும் வாடிக்கையாளர்களும் சரி.. இந்த மோனோபாலியினால் விவசாயிகள் நலிந்து கொண்டிருந்தனர். பிரச்சினை சர்தார் வல்லபாய் பட்டேலின் காதுகளில் விழ, தீர்வு ஒன்றைக் கூறினார். அவரின் யோசனையின்படி விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆனந்த் பால் கூட்டுறவுச் சங்கம் என்ற ஒன்றை நிறுவினர். அதன் சுருக்கம் தான் அமுல்.

பால்சன் மூன்று நாட்கள் தயிரை நன்றாகப் புளிக்க வைத்து வெண்ணெய் தயாரிப்பதால் புளிப்புச் சுவை கூடி இருக்கும். நிறமும் சிறிது மஞ்சளாக இருக்கும். உப்பு வேறு கலந்தே விற்பார்கள். உப்புச் சேர்த்து இருந்ததால் சீக்கிரம் கெட்டும் போகவில்லை. அதனால் மக்களின் நம்பர் ஒன் சாய்ஸாக இருந்தது. அமுலோ பாலிலிருந்து வெண்ணெயை ஒரே நாளில் தான் தயாரிப்போம். புளிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சில கொள்கைகள் வைத்திருந்தார்கள். ஆனால் சந்தையில் விற்பனை ஆகவில்லை. பல வருடங்களாக உண்டதால் பால்சன் வெண்ணெய்யின் சுவைக்கு மக்கள் அடிமையாகி இருந்தனர். முத்து விழாக் கொண்டாடிய நிறுவனம் அல்லவா… என்னதான் கோதுமையில் செய்தது, அஜினமோட்டோ இல்லாதது என வாட்ஸாப் சர்டிஃபிகேட் வாங்கினாலும் ஹாக்கா நூடுல்ஸ், மேகி நூடுல்ஸ் உடன் சுவையில் போட்டிபோட முடியுமா?. அதுபோல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!