Home » இரு மேதைகளும் இருபத்து நான்காம் தேதியும்
ஆளுமை

இரு மேதைகளும் இருபத்து நான்காம் தேதியும்

எம்.எஸ்.வி-கண்ணதாசன்

ஜூன் 24 எம்.எஸ்.வி-கண்ணதாசன் இருவருக்கும் பிறந்த நாள். இது, இரு மேதைகளையும் நினைவுகூர ஒரு சந்தர்ப்பம்.

1949ம் ஆண்டு, ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘கன்னியின் காதலி’ படத்திற்கான இசையமைப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக இருந்த ஓர் இளைஞன் இசைத்து காட்டிய ட்யூன் ஓகே செய்யப்படுகிறது. பாடல் எழுத புதிய பாடலாசிரியர் ஒருவரை வரவழைக்கிறார்கள். ட்யூனைக் கேட்ட அவர் கடகடவென்று பாடல் வரிகளைச் சொல்ல, இசையமைத்த இளைஞனுக்கோ அவர் தந்த வரிகளில் திருப்தியில்லை. பாடலின் சந்தக்கட்டுக்கு ஏற்றதாக வரிகள் இல்லை என்று ஆட்சேபிக்கிறார். அப்போது வேறொரு பாடல் பதிவுக்காக அங்கிருந்த பிரபலப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி வரிகளில் சில திருத்தங்களைச் சொல்ல, அது ஏற்கப்பட்டு பாடல் பதிவாகிறது. இது பாடலாசிரியராய் அறிமுகமாகிய அந்த இளைஞருக்கு அதிருப்தியைத் தருகிறது. பின்னாளில் தான் பெருமளவில் இசையமைக்கப் போவதே அந்தக் கவிஞரின் வரிகளுக்குத்தான் என்பதை இசையமைப்பாளரும், அந்த இசையமைப்பாளனுக்குத்தான் பாடல்களை எழுதிக் குவிக்கப் போகிறோம் என்பதை அந்தக் கவிஞரும் -இருவருமே- அன்று உணரவில்லை. எதையும் சாதிக்க வல்ல காலம் அதை நிகழ்த்திக் காட்டியது.

அந்த இசையமைப்பாளரும், கவிஞரும் நீங்கள் நன்கறிந்தவர்கள்தான். எம்.எஸ்.விஸ்வநாதன்- கண்ணதாசன் என்கிற அந்தக் கூட்டணி அதன்பின் ஐம்பதாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையை ஆண்டது வரலாறு. இருவரும் இணைந்து இசைதந்த பாடல்களை அசைபோடும் முன்னதாக சுருக்கமாக இருவரின் வாழ்க்கையைச் சில வரிகளில் பார்த்து விடலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!