இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர்.
அவருடைய திரைப்படங்களின் எண்ணிக்கையோ, அவர் இசையமைக்கிற வேகமோ, அவருடைய பாடல்கள் ஹிட்டான சதவிகிதமோ, அவர் சம்பாதித்த பணமோ, புகழோ, வாங்கிய விருதுகளோ ஒரு பொருட்டில்லை. இவையெல்லாம் வியந்து பாராட்டவேண்டிய விஷயங்கள்தான் எனினும், இவற்றை எட்டிய வேறு இசையமைப்பாளர்களும் இருக்கிறார்கள், அல்லது, இனி வரக்கூடும். இதுபோன்ற புள்ளிவிவரங்கள் ஒரு மேதையை வரையறுத்துவிடுவதில்லை.
அப்படியானால், இளையராஜா எதனால் மேதை ஆகிறார்?
Add Comment