Home » உக்ரைன் போர்க்களம்: எதிரெதிர் அணியில் துரோணரும் கர்ணனும்
உலகம்

உக்ரைன் போர்க்களம்: எதிரெதிர் அணியில் துரோணரும் கர்ணனும்

உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, சீட் பெல்ட்களை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள். நாம் நுழையப்போவது உக்ரைன் போர்க்களத்துக்குள்.

இடம்: உக்ரைனுக்குள் இருக்கும் ரஷ்ய இராணுவத்தளம்

ரஷ்யப்படைகளுக்கு எரிபொருள் மற்றும் வெடிகுண்டுகளின் தட்டுப்பாடு இருப்பதை முன்பே பார்த்தோம் இல்லையா? ஒருவழியாக இன்னும் சிறிது நேரத்தில், டொனெஸ்க் பகுதியிலுள்ள ரஷ்ய இராணுவத் தளத்திற்கு எரிபொருள் டேங்கர் வந்து சேர்ந்துவிடும். சத்தமில்லாமல் மிகஉயரத்தில் பறக்கும் ட்ரோன்கள், உக்ரேனியப் படைகளுக்கு இந்த உளவுத் தகவலைத் தெரிவித்து விட்டன. அவர்களும் சத்தமில்லாமல் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி விட்டனர்.

இந்த எரிபொருள் டேங்கர்கள் மிக முக்கியமானவை. இதனிடமிருந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ள மற்ற அனைத்து இராணுவ வாகனங்களும் இவ்விடத்திற்கு அணிவகுக்கும். இது தாக்கப்பட்டால் மிகப்பெரிதாய் வெடித்து, கசியும் எண்ணெய் சுற்றியுள்ள அனைத்தையும் உடனே தீப்பிடித்து எரியச் செய்யும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!