Home » ஆபீஸ் – 7
தொடரும் நாவல்

ஆபீஸ் – 7

ஓவியம்: பி.ஆர். ராஜன்

சிவசுப்பிரமணி, மனசுல ஒண்ணும் வெச்சிக்காத.  ஏசி கூலாகிட்டாரு. ரெய்டு, நெனச்சா மாதிரி நடக்கலேனு அவருக்கு டென்ஷன். அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்லே.

7 கல்ல வாங்கு கல்ல வாங்கு

ஏசி கத்திவிட்டுப் போனபின், கொஞ்ச நேரத்திற்கு அங்கிருந்த யாருமே அசையக்கூட இல்லை. சகஜ நிலைக்கு முதலில் வந்ததே சுகுமாரன்தான்.

என்ன சிவசு என்ன ஆச்சு.

தெரியல சார் என்று சொல்லி அவமானத்தில் வறட்சியாக சிரித்தான் சிவசுப்பிரமணியன்.

முழங்கையில் தம்பூரா வாசிக்கும் செக்‌ஷன் ஹெட்டோ, எதிரில் யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதைப் போல, அண்ணாந்தபடி தமக்குத் தாமே தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார்.
ஹேமலதா விதிர்விதிர்த்துப் போயிருந்தாள். அவளது ஜிமிக்கி ஆடாமல் அசையாமல் இருந்தது.

அவனுக்கு ஆத்திரமாக வந்தது. சிவசுப்பிரமணியனைத் தெரியவந்தே இன்னும் முழுசாக அரைமணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் அவன் அப்படித்தான். எதற்காக யாருக்காக என்று எந்த யோசனையும் இல்லாமல் தலையை கில்லட்டினில் கொடுப்பதற்கென்றே பிறவியெடுத்திருப்பவன் போல இருந்துகொண்டிருப்பதே அவன் இயல்பாகிப் போயிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!