Home » மதுரைக்கு மட்டும் ஐந்து லட்சம் பரோட்டா!
உணவு

மதுரைக்கு மட்டும் ஐந்து லட்சம் பரோட்டா!

பரோட்டா டீச்சர் முகம்மது காசிம்

ஐவகை நிலங்கள்போலப் பரோட்டா போடுவதில் ஐவகை நிலைகள் உண்டு. பிசைதல், உருட்டுதல், தட்டிப்போடுதல், வீசுதல் மற்றும் அடித்து வைத்தல் என்பவையே அவை. இதில் ஒன்று பிசகினாலும் பரோட்டா நாம் நினைத்தபடி வராது. சுவையும் மாறிவிடும். மதுரையில் மட்டும் சுமார் மூவாயிரம் பரோட்டாக் கடைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு எப்படியும் ஒரு கடைக்குக் குறைந்தது இருநூறு பரோட்டாக்கள் தேவைப்படும். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் ஒரு நாளையின் தேவை என்ன என்று. குறைந்தது ஐந்து லட்சம் பரோட்டாக்கள் மதுரைக்கு மட்டும். தமிழகம் எங்கும் யோசித்துப் பாருங்கள். இதைத் தவிர ஹோட்டல்களின் கணக்குத் தனி.

கடைகள் இருக்கும் அளவுக்கு பரோட்டா மாஸ்டர்கள் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு எண்ணூறு முதல் ஆயிரத்து ஐநூறு வரை சம்பாதிக்கும் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். சம்பளம் கொடுத்தாலும் நன்கு செய்ய ஆட்கள் இல்லை. அவ்வளவு லாபகரமான, அதே சமயம் தேவை அதிகம் உள்ள வேலை சார் இது. அதனால் இதைச் சிறிதாக எண்ணி விடாதீர்கள். வேலையும் கிடைக்கும். இதை ஒரு தொழிலாகச் செய்தால் லாபமும் கிடைக்கும். மூன்று தலைமுறையாகப் பரோட்டா கடை நடத்தி வரும் குடும்பம் நாங்கள். எங்களது கடைக்கே ஆட்கள் கிடைக்காமல் அலைந்த காலம் உண்டு அப்பொழுதுதான் எனக்கு ‘ஏன் இதை நாம் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாது? வேலை வாய்ப்புகள் உருவாவதை விடுங்கள். நம் மூலமாகப் பல தொழில் முனைவோர்கள் பலன் பெற்றால் நல்லது தானே’ என்ற எண்ணம் வந்தது. அப்போது துவங்கியது தான் ‘செல்பி பரோட்டா கோச்சிங் சென்டர்’ -என்றார் இதன் உரிமையாளர் முகம்மது காசிம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • பரோட்ட்டாவிற்கு பயிற்சியா? நம்ம லிஸ்ட்லயே இல்ல பாஸ்! ஆனாலும் உண்மை தான்! நான் டீக்கடையில் வேலை செய்து இருக்கின்றேன்! இந்த டீ மாஸ்டர் மற்றும் பரோட்டா மாஸ்டர்களுக்கு 90களில் இருந்தே டிமாண்ட் தான் 🙂 கட்டுரை நன்றாக வந்துள்ளது. வாழ்த்துகள்!

  • வித்தியாசமான பயிற்சி வகுப்பைப் பற்றிய கட்டுரை, அருமை. நன்றி.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!