Home » ஒரு குடும்பக் கதை – 5
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 5

முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு

5. இரண்டு கட்சிகள்

1885 டிசம்பர் 28. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், சமூக சீர்தருத்தவாதிகள், பத்திரிகை ஆசிரியர்கள் என மொத்தம் எழுபத்திரண்டு பேர் மும்பையில் ஒன்று கூடினார்கள். கோகுல் தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் அன்றைக்குத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற அமைப்பு உருவானது. கொல்கத்தாவைச் சேர்ந்த வொமேஷ் சந்திர பானர்ஜி தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பொதுச் செயலாளர் ஆனார். அவர்களைத் தவிர மும்பை மற்றும் சென்னை ராஜதானியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரும் இ.தே. காங்கிரசின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றனர்.

1888 ஏப்ரல் மாதத்தில் இ.தே. காங்கிரஸ் மாநாடு அலகாபாதில் நடந்தது. அதில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை எனக் காரசாரமாகப் பலரும் பேசினார்கள். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலே, “சில ஆங்கிலேயர்களின் முயற்சியினால் காங்கிரஸ் உருவானது என்பதால்தான் அது இன்றளவும் இயங்கிக்கொண்டு உள்ளது. இப்படி ஒரு அமைப்பினை இந்தியர்கள் ஆரம்பித்திருந்தால், பிரிட்டிஷ் அரசாங்கம் ஏதாவது காரணம் காட்டி, முளையிலேயே கிள்ளி இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டுக்கு ஜார்ஜ் யூல் என்ற கொல்கத்தாவைச் சேர்ந்த பிரிட்டிஷ் வணிகர் தலைமை தாங்கினார். அலகாபாத்தைச் சேர்ந்த முக்கிய வக்கீல்கள் உட்பட 1400 பேருக்குக்கு அதில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பட்டது…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Terrorism என்பதற்கு பயங்கரவாதம் என்ற சொல்லே சரி .
    Extremism என்பதற்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாக இருக்கும் . ஆனால் எப்படியோ Terrorism என்பதற்கு தீவிரவாதம் என்ற சொல் வழக்கில் வந்து விட்டது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!