Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 5
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 5

5. பேயோடு பேசு!

மா ஆனந்தோ ஒரு சட்ட வல்லுநர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என இரு தேசங்களிலும் அவருக்குப் பணி இருந்தது. அவர் ஒரு தொழிலதிபரும்கூட. தவிர பி.எச்டி முடித்த ஆய்வறிஞர். புனேவில் இருந்த ஓஷோவின் ஆசிரமத்துக்கு அவர் வந்து சேர்ந்தபோது அவருக்கு முதல் முதலில் அளிக்கப்பட்ட பணி, கழிவறை சுத்தம் செய்வது. பிறர் இதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது வேறு. ஆனால் ஆனந்தோ, தனது அகந்தையை உடைக்கத்தான் அந்த வேலையை ஓஷோ தனக்கு அளித்ததாகக் கூறினார்.

ஆரம்பம்தான் அப்படி. அமெரிக்காவில் இருந்து ஓஷோ புனேக்குத் திரும்பிய 1987 ஆம் ஆண்டில் ஆனந்தோ அவரது தனிச் செயலராக இருந்தார். ஆசிரமத்தில் அவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது. மிகவும் அழகான, நேர்த்தியான அறை.

ஒரு நாள் நள்ளிரவு. ஆனந்தோ தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். திடீரென யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. வேகமாக எழுந்து போய்க் கதவைத் திறந்தார். யாரும் இல்லை.

மறுநாளும் நள்ளிரவு யாரோ கதவைத் தட்டினார்கள். எழுந்து போய்ப் பார்த்தால், அப்போதும் யாருமில்லை. தொடர்ந்து இதே போலச் சில தினங்களுக்கு நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டுவதும் அவர் சென்று திறந்தால் யாருமில்லாமல் இருப்பதும் தொடர்ந்தத.

பாதுகாவலர்களை அழைத்து விசாரித்தார் ஆனந்தோ. இரவு நேரத்தில் யாரும் வரவில்லை என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். அப்படியானால், கதவைத் தட்டியது யார்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!