Home » Home 07-09-2022

வணக்கம்

எழுத்து, இசை, ஓவியம் உள்ளிட்ட எந்த நுண்கலையாயினும் சரி. சராசரி ரசனைக்கு / மேம்பட்ட ரசனைக்கு என்று எப்போதும் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வந்திருப்பார்கள். இரு தரப்பு ரசிகர்களுக்கும் எப்போதும் உரசல் இருக்கும். ரசனை மாறுபாடு சார்ந்த மோதல்கள் எழும். காலம் தோறும் உண்டு. உலகம் முழுதும் உண்டு.

இந்தியாவில் எல்லா தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் உண்டென்றால் அது இளையராஜா மட்டுமே. அவரை விமரிசிப்பவர்கள்கூட இசைக்கு அப்பாற்பட்ட விவகாரங்களுக்காக மட்டும்தான் விமரிசிப்பார்களே தவிர, இசையை அல்ல. நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்ணைப் போல வாழ்வோடு ஒன்றிவிட்ட இசை அது.

இந்த இதழின் சிறப்புப் பகுதி இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறது. அவர் இசையமைக்கும் விதம் குறித்துக் கார்த்திகேயன் நாகராஜன் எழுதியிருக்கும் கட்டுரையும் சரி; எந்த அம்சங்கள் அவரை ‘இசையமைப்பாளர்’ என்கிற பொதுவான இடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து மேதை என்ற பீடத்தில் அமர வைக்கிறது என்று ஆராயும் என். சொக்கனின் கட்டுரையும் சரி; எப்படி அவர் நம் வாழ்வோடு இரண்டறக் கலக்கிறார் என்று சுட்டிக் காட்டும் மகுடேசுவரனின் கட்டுரையும் சரி. வெறுமனே துதி பாடும் எழுத்தல்ல. மிகுந்த நுட்பமும் கூர்மையும் கொண்ட கவனிப்பின் விளைவுகள். இளையராஜாவை ரசிப்பதை வாழ்வின் முதல் பணியாகவும் பிறவற்றை அடுத்தும் வைத்துக்கொண்டு வாழ்பவரான பொ. காத்தவராயன், ராஜாவின் பாடல்கள் எப்படியெல்லாம் பிறரால் கையாளவும் களவாடவும் பட்டிருக்கிறது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் பாடல்களை உடனுக்குடன் யூ ட்யூபில் கேட்க வசதியாக ஆங்காங்கே லிங்க் தரப்பட்டுள்ளது.

சென்ற வாரம் காலமான முன்னாள் சோவியத் யூனியனின் இறுதி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத்தின் அருமை பெருமைகளைக் குறித்துப் பல்லாயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த கம்யூனிஸ்டுகள், அந்தக் கட்டமைப்பு சிதைந்ததன் பின்னணியையோ, அதற்கான உண்மைக் காரணங்களையோ குறிப்பிட்டுப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. சோவியத் சிதைந்ததற்கு முழுப் பொறுப்பும் கோர்பசேவ்தான் என்று பழியைத் தூக்கி அவர் தலையில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

உண்மை முற்றிலும் வேறு. கோர்பசேவுக்கு முன்னால் சோவியத்தை ஆண்டவர்களின் காலத்து அவலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெடித்துச் சிதறியபோது கோர்பசேவ் பதவியில் இருந்தார் என்பதே சரி. மறுமலர்ச்சி-வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அவர் பேசியதும் அதை நோக்கி அடியெடுத்து வைத்ததும் ரஷ்யர்களுக்கு அன்று புரியவில்லை. மேற்குலகின் கைக்கூலியாகிவிட்டார் என்று சொன்னார்கள். இன்று வரை அவர்களுக்கு அந்த எண்ணம் இருப்பதனால்தான் அவரது இறுதிச் சடங்குகளுக்கு புதின் செல்லாததுகூட அங்கே ஒரு பொருட்டாக இல்லை. கோர்பசேவை முன்வைத்து, சோவியத் என்ற கட்டமைப்பு சிதறியதன் பின்னணியை விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை.

இவை தவிர, ரோஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் மொத்தமாக விரட்டியடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் நரகத் தீவு குறித்து சிவசங்கரி எழுதியுள்ள கட்டுரை, சசி தரூர் குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாய் மாலில் ஒரு திர்ஹாமுக்கு என்ன வாங்க முடியும் என்று ஆராயும் நசீமாவின் கட்டுரை, அதிகம் தெரியாத வாட்சப்பின் சில நூதன வசதிகளை வெளிச்சமிடும் வெங்கடரங்கனின் கட்டுரை என இந்த இதழில் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். மேலும் சிறப்பான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

சிறப்புப் பகுதி: இளையராஜா

வெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் – விமரிசனம்

பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு...

இசை

ஒரு மேதையை இனம் காண்பது எப்படி?

இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர். அவருடைய திரைப்படங்களின்...

இசை

எடுத்ததும் கோத்ததும்

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ என்று ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருப்பார். அதுதான் உண்மை. இசை மொத்தமும் இந்த ஏழு...

வரலாறு முக்கியம்

இசை வரலாற்றில் இளையராஜாவின் இடம் எது?

இசை இல்லாமல் தமிழர் வாழ்வு இருந்ததில்லை. நமது வாழ்விலும் மொழியிலும் இசையின் தாக்கம் எத்தகையது என்பதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை அளிக்க...

இசை

ராஜ வீதி

இளையராஜா கடந்து வந்த பாதையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது இக்கட்டுரை. பிறப்பு பண்ணைபுரம், தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரக் கிராமம்...

சுற்றும் பூமி

உலகம்

தக்காளிச் சட்னி செய்வது எப்படி?

சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை...

இலங்கை நிலவரம்

ஒன்பதில் சனி

இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித்...

உலகம்

வேலை போகும் காலம்

தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும்...

சிந்தித்த வேளை

நம் குரல்

தேசபக்தி படும் பாடு

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம், பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில்...

நுட்பம்

கூகுள் தரும் கூடுதல் வசதிகள்

நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில...

 • தொடரும்

  கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

  கடவுளுக்குப் பிடித்த தொழில் – 10

  கண்ணின் அருமை கண்ணின் அருமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஐம்புலன்களில் மிக முக்கியமான புலன் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது சுற்றுப்புறத்திலிருந்து வரும் தகவல்களில் கிட்டத்தட்ட 80 % தகவல்கள் கண்கள் மூலமாகத்தான் நமது மூளையை வந்தடைகின்றன. நமது மூளையில் பின்புறத்தில் விஷூவல் கார்டெக்ஸ் எனப்படும்...

  Read More
  உயிருக்கு நேர் தொடரும்

  உயிருக்கு நேர் – 10

  10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...

  Read More
  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 35

  35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...

  Read More
  தல புராணம் தொடரும்

  ‘தல’ புராணம் – 10

   தொழிற்சாலைப் பெண்மணி ரேவதி அத்வைதி கல்லூரியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகும் போது அவரது வகுப்பில் அவர் மட்டும் ஒரே ஒரு மாணவி. நண்பர்கள், உறவினர்கள், “பெண்பிள்ளை ஏன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்கள். அது மட்டுமல்லாது ஒரு பேராசிரியரே, “நீ வொர்க் ஷாப்பில் வேலை...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை -36

  36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...

  Read More
  error: Content is protected !!