Home » ராஜ வாத்தியார்!
இசை

ராஜ வாத்தியார்!

‘இசை எங்கிருந்து வருகிறது?’ என்ற ஆதாரக் கேள்வி, இந்தத் தலைமுறையில் நகைப்புக்குரிய இன்னொரு பழங்கேள்வியாக ஆக்கப்பட்டு அடித்துத் துவைக்கப்பட்ட ஒன்று. உலகின் எல்லா வகையான இசையும் இன்று நம் கையளவு உலகத்தில் ஒலிபரப்பப்பட்டு கேட்டு ரசிக்கக்கூடிய காலம் வந்துவிட்ட பிறகும், முன்பிருந்த அதே இசை ரசனையும், ரசிகர்களும் இருக்கிறார்களா என்ற கேள்வியும் இந்தத் தலைமுறையின் முன் வைக்கப்படுகிற மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மூன்று தலைமுறைகளாகப் பேரிசைஞர்கள் கையில் புடம்போடப்பட்டு கோலோச்சி வந்த தமிழ்த் திரையிசையின் தரம் இந்த தசாப்தத்தில் தலைகீழாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் (Indian Institute of Technology, Madras) இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து, அவர் பெயரிலேயே ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற புதிய வளாகத்தை உருவாக்கியிருக்கிறது. ‘அனைவருக்குமான இசை’ என்ற தலைப்பில், இந்த மையம், மனிதனுக்கும் இசைக்குமான தொடர்பை அறிவியல்பூர்வமாக தெரிந்து கொள்ளப் பயன்படும் என்றும் இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இசை தொடர்பான படிப்புகளும், இசைக் கருவிகளை வடிவமைத்து ஆராயும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று ஐ.ஐ.டி கூறுகிறது.

ஏற்கனவே கலை சம்பந்தப்பட்ட சில சான்றிதழ்ப் படிப்புகள் அங்கு கற்பிக்கப்பட்டாலும், முழுவதுமாக இசை தொடர்பான பட்ட, பட்டய, ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்கப்படுவது இதுவே முதன்முறை. போலவே கல்வியை மேல்தட்டு மக்களுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்கும் ஜனநாயகப்படுத்தும் முயற்சியில் பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவது போலவே இசை சம்பந்தப்பட்ட இந்த வளாகமும் அமையும் என்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!