Home » ஹமாஸ்-இஸ்ரேல் போர்: ரத்தமும் தக்காளிச் சட்னியும்
உலகம்

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: ரத்தமும் தக்காளிச் சட்னியும்

காஸாவில் தற்போதைய தாக்குதல்களில் இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மிச்சமிருக்கும் இடத்தில்தான் ஆண்களும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். இதனால்தான் குழந்தைகள் உயிரிழப்பு அதிகளவில் உள்ளது. மொத்த மக்கள் தொகையிலும்கூட குழந்தைகள் எண்ணிக்கை கணிசமான பங்கு என்பதும்கூட ஒரு காரணம். இரண்டாவது வாரத்தின் முடிவில் இஸ்ரேல் தரப்பில் இறந்த மக்களின் எண்ணிக்கை 1400 என்ற அளவில் அப்படியே இருக்கிறது. பாலஸ்தீன் தரப்பில் 4200-ஐத் தாண்டிவிட்டது. கட்டடங்களுக்கு இடையே புதைந்துள்ளோரை மீட்க வழியில்லை. படுகாயம் அடைந்தவர்களுக்கு மின்சாரம் இன்றி உரிய சிகிச்சை அளிக்க இயலவில்லை. இஸ்ரேல் தாக்குதல் தினமும் தொடர்கிறது. இரண்டு சமமான எதிகரிளுக்கிடையே நடக்கும் போரல்ல இது. இதனால்தான் பாலஸ்தீனத் தரப்பில் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. ஒரே ஆறுதல் மக்கள் தன்னெழுச்சியாக உலகம் முழுக்கப் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து போரை நிறுத்த அழுத்தம் கொடுப்பதே.

காஸா மருத்துவமனையில் வெடித்த குண்டின் அதிர்வு உலகம் முழுக்க எதிரொலித்தது. இஸ்ரேல் இதைத் தாங்கள் செய்யவில்லை, ஹமாஸ் அல்லாத மற்றொரு இயக்கம் காரணம் என்றது. அமெரிக்கா அதை வழிமொழிந்தது. இவர் பேச நினைப்பதை அவர் பேசுவார். அவர் காண எண்ணும் உலகை மட்டும் இவர் காண்பார். இந்தப் பாசமலர்களிடம் ஆதாரம் கேட்டால் அடுத்தவர் பக்கம் கை காண்பிப்பார்கள். ஆடியோ, வீடியோ ஆதாரம் எல்லாம் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்த இஸ்ரேல் இரு நாள்கள் கழித்து பத்திரிகையாளர்களைக் கூட்டி அண்ணாமலை கொடுத்த வாட்ச் பில் போல இரண்டு படங்களைப் பெரிய சார்ட் அட்டையில் ஒட்டிக் காண்பித்தார்கள். அவ்வப்போது காஸாவில் உள்ள குழுக்கள் ஏவுகணை செலுத்தும் முயற்சியில் தோல்வியடைந்து அங்கேயே வெடிப்பதை உணர்த்தும் சிவப்புப் புள்ளிகள் நிறைந்த காஸா வரைபடம் ஒன்று. மருத்துவமனை பார்க்கிங்கில் எரிந்து போன கார்களின் படம் மற்றொன்று. எங்கள் ஏவுகணைகள் பெரிய பள்ளத்தை உருவாக்கும். இந்தப் படத்தில் கார்கள் மட்டும் எரிந்துள்ளன. பெரிய பள்ளம் இல்லை. எனவே நாங்கள் இதைச் செய்யவில்லை என்பது இஸ்ரேலின் வாதம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!