கிடங்குத் தெருவிற்குப் பேருந்தில் சென்றால் பாரிமுனையில் இறங்கிக் கொள்ள வேண்டும். மெட்ரோ எனில் உயர் நீதிமன்றத்தில் இறங்க வேண்டும். யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள். இங்கே செல்லப் பொது வாகனம் தான் வசதி. சொந்த வாகனத்தில் சென்றால் பார்க்கிங் செய்வது கடினம். அது ஒரு ஞாயிறு என்பதால் பெரும்பாலான கடைகள்...
Author - ஶ்ரீதேவி கண்ணன்
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதை என்று கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குற்ற வழக்குகள் ஆடில் ஆரம்பித்து படிப்படியாகப் பெருகி இன்று மனிதனில் வந்து நிற்கின்றன. பண்டைய வழக்குகளுக்கு இன்று ஆதாரங்கள் முளைத்திருக்கின்றன. ஜனவரி மாத டெல்லியின் குளிரைக் கற்பனை...
சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடைக்குச் செல்வதெனில் கோட்டை ரயில் நிலையத்தைவிட்டு இறங்கி நடந்து போகலாம். அல்லது ப்ராட்வே பேருந்து நிலையத்தில் இறங்கித் திரும்பி நடக்கலாம். முதல் வழியில் பரபரப்பான பர்மா பஜாரைக் கடந்துவர வேண்டியிருக்கும்.. இரண்டாவது வழி என்றால் நடைபாதையில் சிறுசிறு கடைகள். பழங்கள்...
இந்து சமய அறநிலையத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீயாக வேலை செய்திருக்கிறார்கள். நெடுங்காலமாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆலயங்களை எல்லாம் புனரமைத்துக் குடமுழுக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுக்கு ஆயிரமாவது ஆலயம், மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில். கடந்த பல மாதங்களாகத்...
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த மளிகைக் கடைகளையும் இன்றிருக்கும் மளிகைக் கடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்று கடைக்குச் சென்றால் இது இன்ன கடை, உள்ளே இன்னார் இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு லேஸ் போன்ற தின்பண்டக் கவர்கள் கடையை மூடிக்கொண்டிருக்கும். பல்பொருள் அங்காடி...
பர்மா பஜாருக்குப் போகிறோம் என்றதும் ‘செத்துப்போன சந்தை அது. எதற்கு அங்கே செல்ல வேண்டும்? அங்கே ஒன்றுமில்லை.’ என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். கடற்கரை ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெளியே வந்தால் இருபுறமும் பர்மா பஜார்தான். அப்படியொன்றும் அவசர சிகிச்சையில் இல்லை. உயிரோடு தான் இருக்கிறது. முன்பொரு...
சமீபத்தில் தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு ஒரு பேசுபொருளானது. அரசியல் கிடக்கட்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தப் போட்டித் தேர்வில் வென்று ஓர் அரசு வேலையைப் பெறுவது எளிதா? சிரமமா? குரூப்-II, குரூப்-I தேர்வுகள் பிரிலிம்ஸ், மெய்ன்ஸ், இன்டர்வியூ என்று மூன்று படிநிலைகளைக் கொண்டவை...
தனியார் வாகனங்கள் இல்லாமல் வடபழனி வெங்கீஸ்வரரைத் தரிசிக்க எளிய உபாயம் மெட்ரோ. மெட்ரோவில் செல்லும்போதே, ‘என் அப்பனைப் பார்க்கும்முன் என்னை தரிசி’ என்பார் வடபழனி முருகன். கோபுர தரிசனம் காட்டிக் கோடி புண்ணியம் தந்து நம்மை அழைப்பார். புண்ணியம் வந்த பிறகு பாவம் அழியும் தானே? பாவம் மட்டுமல்ல…...
ஊத்துக்குளி வெண்ணெய், காரைக்குடி கண்டாங்கி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்று அடிக்கடி புழங்கக் கூடிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஏன் இவற்றை ஊர்ப் பெயரோடு சேர்த்துச் சொல்கிறோம்? வெண்ணெய் நம் வீட்டில் கூடத்தானே எடுப்போம்.? எல்லாப் பொருட்களும் எல்லா இடங்களிலும் தானே கிடைக்கின்றன? திருமணம் என்ற...
தி நகர் உஸ்மான் சாலையில ரங்கநாதன் தெருவை அடுத்திருக்கும் சிறிய சந்துதான் சத்யா பஜார். வேலன் ஸ்டோருக்கு எதிர்ப்புறம் ‘அன்னை சத்யா பலபொருள் அங்காடி’ என்ற ஆர்ச் நம்மை வரவேற்கும். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்களுக்கான நுழைவாயில் இது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து ரங்கநாதன் தெருவிற்குள்...