Home » குற்றங்கள் குறைவதில்லை
குற்றம்

குற்றங்கள் குறைவதில்லை

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதை என்று கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குற்ற வழக்குகள் ஆடில் ஆரம்பித்து படிப்படியாகப் பெருகி இன்று மனிதனில் வந்து நிற்கின்றன. பண்டைய வழக்குகளுக்கு இன்று ஆதாரங்கள் முளைத்திருக்கின்றன.

ஜனவரி மாத டெல்லியின் குளிரைக் கற்பனை செய்யுங்கள். அப்படியான ஒரு குளிர் இரவில் சப்ஜி மண்டியில் உள்ள முகமது கானின் வீட்டை மூன்று பயணிகள் தட்டுகிறார்கள். கதவைத் திறந்தவரிடம் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். முற்காலத்தில் நம்மூரில் இப்படியான பயணிகள் தங்குவதற்காகவே திண்ணை வைத்த வீடுகளை அமைத்திருந்தனர். ஆனால் டெல்லியின் குளிருக்கு வாசல் திண்ணை சாத்தியம் இல்லை. எனவே, கான் கருணையுடன் தனது அறையில் தங்க வைக்கிறார். மறுநாள் காலையில் எழுந்தால் அவர்களைக் காணவில்லை. தூங்கக் கொடுத்த படுக்கையும் காணவில்லை. தான் ஏமாந்ததையும் பொருட்கள் களவு போனதையும் கான் உணர்ந்தார். இது நடந்தது 1876-ஆம் ஆண்டு. எளிய பொருளான படுக்கையானாலும் கான் விடுவதாக இல்லை. புகார் செய்திருக்கிறார்.

டெல்லியில் பதிவாகியுள்ள ஆரம்பகாலக் குற்றங்களின் பட்டியலை தற்போது நகரக் காவல்துறையினர் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அதில் 150 ஆண்டுகளுக்குப் பிறகும் கான் உடைமைகளைத் தொலைத்த வழக்கும் இருக்கிறது.

எப்படி இந்த வழக்குகள் இத்தனை ஆண்டுகள் கழித்து உயிர் பெற்றுள்ளன என்றால் சென்ற ஆண்டில் அரசு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பழைய காப்பகத்தில் உலவியிருக்கிறார். அப்போதுதான் இவற்றை எல்லாம் கண்டுபிடித்திருக்கிறார். உடனே காவல்துறைக்கும் தகவல் சொல்லிவிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!