Home » காலம் உறையும் காகிதப் பொட்டலங்கள்
சந்தை

காலம் உறையும் காகிதப் பொட்டலங்கள்

சைதாப்பேட்டை மார்க்கெட்

இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த மளிகைக் கடைகளையும் இன்றிருக்கும் மளிகைக் கடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்று கடைக்குச் சென்றால் இது இன்ன கடை, உள்ளே இன்னார் இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு லேஸ் போன்ற தின்பண்டக் கவர்கள் கடையை மூடிக்கொண்டிருக்கும். பல்பொருள் அங்காடி போன்ற பெரிய கடைகளுக்குச் சென்றால் அங்கும் சொகுசுதான். எல்லாம் எடை வாரியாகப் பிரித்து பாக்கெட் செய்யப்பட்டிருக்கும். கவரில் இருக்கிறது என்பதற்காகவே அதுதான் சுத்தம், தரம் என்று நினைத்துச் சாதாரண மளிகைக் கடைகளுக்கு மூடு விழா நடத்தியவர்கள் நாம். ஆனால் எந்த நவீனமும் இன்றி பழங்காலத்திற்குள் நுழைந்துவிட்டது போல் தோன்றச் செய்யும் ஒரு மார்க்கெட் சைதாப்பேட்டையில் இன்றளவும் இருக்கிறது. விலையும் தரமும் அவ்வளவு நயம்.

பிராண்டட் என்ற ஆடம்பரம் இங்கே இல்லை. கட்டடமும் அப்படிதான். ஒரு நூற்றாண்டை நெருங்கும் அளவிற்கு பழமை வாய்ந்தது. எந்தக் கடைகளும் கவர்களால் புதைந்திருக்கவில்லை. ஆனால் மொத்தக் கடைகளும் வெளியே தெரியாதபடி நடைபாதைக் கடையினர் தார்ப்பாயால் மூடி இருந்தார்கள்.

பேருந்தில் வந்தால் கலைஞர் நுழைவாயில் தெருவிற்குள் இருக்கிறது. ரயிலில் வந்தால் இன்னும் பக்கமாக இருக்கும். பஜார் தெருவிலிருந்து சுரங்கப்பாதையை ஒட்டி உள்ளே சென்றால் மார்க்கெட். இதுதான் மார்க்கெட் என்று தெரியாதபடி தார்ப்பாயும், சுரங்கப்பாதையும் அதை மூடியிருக்கும். மளிகைக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள், மஞ்சள், குங்குமம் போன்ற பூஜைப் பொருள் கடைகள், ஏன்… சாமிக்குச் சாத்தும் புடைவை துண்டு என்று துணிக்கடை வரை ரகம் வாரியாகக் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!