2023-ம் வருடம் பிறந்ததும், எனக்குக் கிடைத்த முதல் பரிசு ஆசிரியர் பா.ரா. நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்புகள்தான். மொழியைப் படிக்க, எழுதத்தெரியும் என்ற அடிப்படைத் தகுதியைத்தாண்டி என்னால் முறையாகத் தமிழ் உரைநடையைக் கையாளத்தெரியும் என்ற நம்பிக்கையையும், நுட்பங்களின் வழி அவற்றை மெருகேற்றக்கூடிய நெளிவு...
Author - சிவராமன் கணேசன்
ஜெமினி என்று பெயர் சொன்னவுடன், சட்டென நினைவுக்குக் கொண்டுவர நிறைய ஆளுமைகள், நிறுவனங்கள், திரைப்படங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் போன தலைமுறையின் நினைவுடனேயே தங்கிவிட்டன. இந்தத் தலைமுறையின் நினைவுக்கும், செயற்கை நுண்ணறிவின் புதிய பாய்ச்சலுக்கும் கூகுள் ஒரு புதிய...
அக்பர்- பீர்பாலின் பிரபல நீதிக்கதை ஒன்றில், நாட்டில் மருத்துவர்கள் அதிகமா, நோயாளிகள் அதிகமா என்ற சந்தேகம் அக்பருக்கு வரும். பீர்பால் அதைத்தீர்க்கும் விதமாக அவரை மாறுவேடத்தில் கூட்டிச்சென்று ஊரில் ஒரு நோய் வந்தால், அதைத் தீர்ப்பதற்காக எத்தனைப் பேரிடம் எத்தனை யோசனைகள் உள்ளன என்பதை நேரில் நிரூபிப்பார்...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்பு தலைகுனிந்து நிற்பதை உணர்தல் ஆழ்ந்த ஆன்மிகம். “வானமும் தெரியாமல், பூமியும் தெரியாமல், மேகம் சூழ்ந்து வலுத்துப் பெய்யும் இந்த...
சென்ற வாரம் இணைய உலகைக்கலக்கிய இரண்டு வீடியோக்கள் deep fake என்ற போலிச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டன என்ற செய்தியை உணர்வதற்குள்ளாகவே உலகெங்கும் பரப்பப்பட்டன. அதிகப் பார்வையாளர்களைக் கொண்டிருந்தன. கிண்டல் செய்யப்பட்டன. பார்த்து ரசிக்கப்பட்டன, சிரிக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னணி உண்மையை...
தகவல் நெடுஞ்சாலை (information highway) என்ற அழகிய பதம் எத்தனை அர்த்தபூர்வமானது என்பதைத் தொழில்நுட்பம் வளர வளர நாம் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். எப்படி பெருநகரங்களை இணைக்கும் சாலைகள், ஒவ்வொரு தசாப்தத்திற்கும் மாற்றம் அடைந்தும், பயணம் செய்யும் தூரத்தைச் சாலைகளின் தரமும், வாகனங்களின் வேகமும்...
புதையல் என்ற மந்திரச்சொல் மனிதகுலத்திற்கு அளப்பரிய ஆனந்தந்தை அளிப்பது. பொருளாதார ரீதியாகவும், மானுடத்தின் ஆதியை அறிந்து கொள்ளும் பாரம்பரிய ஆராய்ச்சிகள் தொடர்பாகவும், பழம் பண்பாட்டை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்காகவும் என்று புதையல்களைத் தேடிய பல பயணங்களும், அகழ்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து...
மிளகாய்ப்பொடியும், புளியும், பெருங்காயமும் கலந்த குழம்புக்கரைசலின் ஆதார வாசனையோடு, இள முருங்கைக்காய், சிறிய வெங்காயங்கள், கருவேப்பிலை சேர்ந்து எழும் அற்புத மணம் இந்த அதிகாலையை அத்தனை சுகந்தமாக்குகிறது. கண்களை மூடி, அந்த தூரத்துக் குயிலின் ஓசையை இந்தக் கூட்டணிக்கு இசைச் சேர்க்கையாகச்...
உளவு பார்த்தல் என்பது மன்னர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. புறாக்களில் தொடங்கி இப்போது தனியாக செயற்கைக்கோள் செலுத்திப் பார்க்குமளவுக்கு உளவின் வலு ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் தேவையான இன்னொரு நிர்வாக உத்தியாகத்தான் இருந்துவருகிறது. இது பெரும்பாலும் ரகசியமாகத்தான் நடக்கிறது என்றாலும், சில நேரங்களில்...
இஸ்ரேல், பாலஸ்தீன் போருக்கு இன்றைக்கு ஏறத்தாழ 4000 வயது. ஆயினும் வருடாவருடம், புதிய புதிய அவதாரங்களோடு, புதுப்புது அர்த்தங்களோடு, புத்தம்புதிய வடிவங்களில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன அதன் போர் அத்தியாயங்கள். சமீப காலங்களில் இந்தப் போரில் வெகுவாக வளர்ந்துவிட்ட தொழில்நுட்பமும், செயற்கை...