Home » நெடுஞ்சாலையிலொரு விமானம்
அறிவியல்-தொழில்நுட்பம்

நெடுஞ்சாலையிலொரு விமானம்

தகவல் நெடுஞ்சாலை (information highway) என்ற அழகிய பதம் எத்தனை அர்த்தபூர்வமானது என்பதைத் தொழில்நுட்பம் வளர வளர நாம் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். எப்படி பெருநகரங்களை இணைக்கும் சாலைகள், ஒவ்வொரு தசாப்தத்திற்கும் மாற்றம் அடைந்தும், பயணம் செய்யும் தூரத்தைச் சாலைகளின் தரமும், வாகனங்களின் வேகமும் குறைத்ததோ அதேபோலத் தகவல் நெடுஞ்சாலையிலும் ஒவ்வொரு வருடமும் இணைய வேகமும் அதிகரித்து வந்ததைப் பார்த்து வந்திருக்கிறோம்.
இப்போது அந்த நெடுஞ்சாலையில் ஒரு விமானம் இறங்கியிருக்கிறது. ஆமாம் இந்த வாரம், நொடிக்கு 1.2 டெராபிட் (TB) டேட்டாவை தரவிறக்கம் செய்யும் திறன் கொண்ட உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்பை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப மொழியிலல்லாமல், சற்று நாம் புரிந்துகொள்ளும் வகையில் சொல்ல வேண்டுமென்றால், இதனை உபயோகித்து ஒரு நொடியில் சுமார் 150 முழுநீளத் திரைப்படங்களைத் தரவிறக்க முடியும். (இன்றைய இந்தியாவின் அதிவேக இணைப்பு கணக்கின்படி) ஒரு மூன்று மணிநேர சர்வ துல்லியமான திரைப்படத்தை தோராயமாக 3 ஜிபி அளவு கொண்ட திரைப்படத்தை அதிகபட்சம் 13 நிமிடத்தில் தரவிறக்க முடியும். இப்போது நினைத்துப் பாருங்கள்… 1 நொடியில் 150 திரைப்படங்கள் என்பது, இந்த நெடுஞ்சாலையில் ஒரு விமானம் போகும் வேகம்தானே?!

இணையவெளியில், தொழில்நுட்பம் சார்ந்து எப்போதுமே உச்சத்தில் இருக்கும் சீனாவின் இருப்பை, பீமபுஷ்டி லேகியம் கொடுத்து இன்னும் வலுவாக்கியிருக்கிறது இந்தப் புதிய அதிவேகப்புரட்சி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!