Home » மோடியும் ராஷ்மிகாவும்
அறிவியல்-தொழில்நுட்பம்

மோடியும் ராஷ்மிகாவும்

சென்ற வாரம் இணைய உலகைக்கலக்கிய இரண்டு வீடியோக்கள் deep fake என்ற போலிச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டன என்ற செய்தியை உணர்வதற்குள்ளாகவே உலகெங்கும் பரப்பப்பட்டன. அதிகப் பார்வையாளர்களைக் கொண்டிருந்தன. கிண்டல் செய்யப்பட்டன. பார்த்து ரசிக்கப்பட்டன, சிரிக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னணி உண்மையை உணர்ந்து கொண்டபோது அதிரவைத்தன.

முதலாவது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா ஒரு நீச்சல் உடையில், சில நொடிகள் ஒரு லிஃப்ட்டுக்குள் நுழைவது போன்ற காட்சி. ஒரு முன்னணி நடிகையின் அரைகுறை ஆடை கொண்ட காட்சி என்பது இணையத்தில் பற்றிக்கொள்ளும் சங்கதி. அப்படித்தான் அது பரபரக்கும் பேசுபொருள் ஆனது.

பின்னர், அது அவரல்ல. ’ஸாரா படேல்’ என்கிற மாடலின் உருவத்தின் மீது ராஷ்மிகா போலச்செய்யப்பட்ட பிம்பம் என்பதை ஒரிஜினலையும், போலியையும் வைத்து விளக்க வீடியோக்கள் வந்தன. ராஷ்மிகா கண்டனச்செய்தி வெளியிட்டார். அமிதாப் பச்சன் இந்த மோசமான உதாரணம், எல்லா நடிகர் நடிகைகளையும் தீண்டும் ஆபத்துக்காலத்தில் இருப்பதன் அச்சத்தை வெளியிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!