தென்னகத்தில், வடகிழக்குக் காற்று நிலத்திலிருந்து கடலுக்கு வீசும் போது அதன் ஒரு பகுதி வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, மழையைத் தாங்கும் மேகங்களைக் கொண்டுவருகிறது. இது அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள...
நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட மாதத்தின் அனைத்து நாள்களையும் ஏதாவதொரு காரணம் சொல்லிப் பண்டிகை, நோன்புகளாக மாற்றியிருந்தார்கள். வாழ்நாளின் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல. வருடாவருடம் அரசாங்கம் வெளியிடும் பண்டிகைக்...
அக்டோபர் 9, 2023. புது டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது அதிகாரிகளுடன் வந்திருந்தார். ‘நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்’, என்று பேசத் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் நாளை...
இங்கிலாந்தில் ரிஷி சுனக், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் தர்மன் சண்முகரத்னம். இப்படிப் பல நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் / வகிப்பவர்கள் வரிசையில், தீவு தேசமான மொரிஷியசில் விவேக் ஜோஹ்ரி சேர்கிறார். அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக...
வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால் இங்கு பதினேழு கோடி மக்கள் வாழ்கிறார்கள். ரஷ்யாவின் மக்கள் தொகையைவிட அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில் (1947), பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகச்...
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடைப்பட்ட பகுதி காக்கேசியா. அதில் கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையில் இருக்கும் இரு நாடுகள் அர்மேனியா மற்றும் அசர்பைஜான். அந்த இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதி தான் நாகோர்னோ – கராபாக் நிலப்பகுதி. நான்காயிரத்து நானூறு சதுர...
செப்டம்பர் 9 2023. டெல்லி, ஜி 20 உச்சி மாநாடு. மதிய உணவு வேளை முடிந்து அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்கும் நேரம். கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். மிகுந்த மகிழ்ச்சியுடன், நம் அனைவரின் கடின உழைப்பிற்குப் பயன் கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன். டெல்லிப்...
எண்ணெய்க் கிணறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், உலகத்தை ஆளலாம். இது இருபதாம் நூற்றாண்டின் கதை. பெரிய மாற்றமில்லை, எண்ணெய்க்கு பதிலாக லித்தியம் என்று போட்டுப் படித்தால், அது இன்றைய நிலை. உலக நாடுகள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தூக்கிப் பிடிக்கப்போகும் கனிமம் லித்தியம்...
மே 2022 உதய்பூர் பிரகடனம். நவம்பர் 2022 தேர்தல் பணிக்குழு (task force) கூட்டம். கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். காங்கிரஸின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், கட்சியில் மும்முரமாக வேலை நடக்கிறதென்று. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கட்சியில்...