Home » காஷ்மீரில் லித்தியம்: லாபங்களும் அபாயங்களும்
இந்தியா

காஷ்மீரில் லித்தியம்: லாபங்களும் அபாயங்களும்

எண்ணெய்க் கிணறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், உலகத்தை ஆளலாம். இது இருபதாம் நூற்றாண்டின் கதை. பெரிய மாற்றமில்லை, எண்ணெய்க்கு பதிலாக லித்தியம் என்று போட்டுப் படித்தால், அது இன்றைய நிலை.

உலக நாடுகள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தூக்கிப் பிடிக்கப்போகும் கனிமம் லித்தியம். அது தான் இந்த தசாப்தத்தின் மகாராஜா. எண்ணெயைப் போன்றே லித்தியமும் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. உலகின் நான்கு நாடுகளிலிருந்துதான் எண்பது சதவிகித லித்தியம் கிடைக்கிறது.

கைப்பேசி, மடிக்கணினி என கட்ஜேடுட்டுகள் தொடங்கி எலக்ட்ரிக் வாகனங்கள் வரை அனைத்திற்கும் தேவையானது பேட்டரி. லெட் ஆசிட் பேட்டரி, நிக்கல் கேட்மியம் என்று பல மாற்றுகள் இருந்தாலும், லித்தியம் பேட்டரிகள் தான் தேவையைச் சரியாகப் பூர்த்தி செய்கிறது. இதனுடைய சிறப்பு, அதன் லேசான எடை. அதிக அளவிலான ஆற்றலை, நெடுநேரம் உள்ளடக்கும் தன்மை. தேவையான நேரத்தில் அந்த ஆற்றலைக் கடத்தவல்லது. இத்தனை அம்சங்களுடன் ஒரு மாற்று வரும் வரை, லித்தியத்தின் ராஜ்யம்தான்.

இந்த லித்தியக் கனிம வளங்கள் அதிகம் இருப்பது ஆஸ்திரேலியா, மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளான சிலி, பொலிவியா மற்றும் அர்ஜெண்டினா. இவை கூட்டாக லித்தியம் ‘முக்கோண நாடுகள்’ என்றழைக்கப்படுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!