Home » ஐந்து மாநிலத் தேர்தல் : வெல்லப்போவது யார்?
இந்தியா

ஐந்து மாநிலத் தேர்தல் : வெல்லப்போவது யார்?

தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

அக்டோபர் 9, 2023. புது டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது அதிகாரிகளுடன் வந்திருந்தார். ‘நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்’, என்று பேசத் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் நாளை அறிவித்துவிட்டு, மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளைச் செலுத்தத் தயாராகுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

அவர் பேசிமுடித்த அந்த நிமிடத்திலிருந்து வாக்குப்பதிவு நடைபெறப் போகும் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக அர்த்தம். கிட்டத்தட்ட 16.14 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.

ஆளும் கட்சியினர் அதிகார துஷ்ப்ரயோகம் செய்யக்கூடாது. போட்டியிடும் எந்தக் கட்சியும் மத இன உணர்வுகளைத் தவறுதலாகக் கையாளக் கூடாது. பிரசாரச் செலவுகளைக் கணக்குக் காட்டவேண்டும், வாக்காளர்களுக்குப் பணம், பொருள் கொடுக்கக்கூடாது, தேர்தல் நாளுக்கு 48 மணி நேரம் முன்பு அனைத்து கூட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு நூறு மீட்டருக்குள் கட்சியினர், மக்களைத் தொடர்புகொண்டு பேசக் கூடாது என்பதைப் போலப் பல கண்டிஷன்கள் அடங்கிய ஒரு தாளை ‘தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்’ என்று தலைப்பிட்டுத் தருவார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!