சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டு விளையாடுவதற்குத்தான் ரோந்துக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கும் அளவிற்குத் தாக்குதல்கள் வரைமுறையின்றி நடந்து கொண்டுள்ளன...
Author - நஸீமா ரஸாக்
பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு போயிருக்கிறார்கள். ‘யார் அந்த பென்கிவிர்?’ என்றொரு கேள்வி உங்கள் மனத்தில் இந்நேரம் எழுந்திருக்கும். அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், வேறொன்றை – இது...
உங்களுக்கு மஹ்சா அமினியை நினைவிருக்கிறதுதானே..? சில மாதங்களுக்கு முன் இருபத்திரண்டு வயதான, குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் மஹ்சா அமினி, அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமினி, உயிரற்றவராகத்தான் வீட்டுக்குத் திரும்பினார். அதைத் தொடர்ந்து, அங்கும் இங்கும் பல போராட்டங்கள்...
நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவைபட்டது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என்...
பதினைந்து ஆண்டுகளாகத் துபாயில் வசிக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் வராத அழைப்பு அன்று வந்தது. அரபித் தோழி ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். வந்தே ஆக வேண்டும் என்ற அன்புக் கட்டளை வர, நெகிழ்ந்து போனேன். இந்த ஒரு காரணம் போதாதா… போடாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளுக்குப் புத்துயிர் கொடுக்க..? சென்னை...
டிசம்பர் ஏழாம் தேதி உலக அரசியல் வல்லுநர்கள், ஆட்சியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அனைவருடைய கண்களும் சவூதி அரேபியாவில் நிலைகொண்டிருந்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சவூதி அரசு கொடுத்த பலமான வரவேற்புதான் அதற்குக் காரணம். ஜின்பிங் வந்த விமானத்தை, சவூதி அரசின் நான்கு விமானப் படை ஜெட்கள், மெய்க்காவல்...
நீரில் நடந்த பாமரன் ஆற்றங்கரையில் இருந்த பெரிய மரத்துக்கு அடியில் சூஃபி ஞானி ஒருவர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். பல்வேறு ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த அவரது மனம், அறம் மற்றும் அறிவார்ந்த சிக்கல்கள் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தது. அப்போது அவரது சிந்தனையைக் கலைக்கும் விதமாகத்...
கெட்ட பையன் இப்படியே, வழக்கமான வாழ்க்கையோடு பத்து நாள் பறந்துபோனது. பள்ளியில் நடாஷாவுக்குச் சில தோழிகள் கிடைத்துவிட்டார்கள். அனுஷா, பூனேக்காரப் பொண்ணு. டிசரி, இலங்கை சிங்களப் பெண். கிரேஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். டாணா, செர்பியா நாட்டைச் சேர்ந்தவள் என்று ஒரு பட்டியலை பர்வீனிடம்...
துருக்கியில் உள்ள ஒரு நீதிமன்றம், அட்னான் ஒக்டர் என்ற எழுத்தாளருக்கு (இவர் ஒரு தொலைகாட்சி பிரபலமும்கூட.) 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது உலகில் இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிக நீண்ட கால தண்டனையாகக் கருதப்படுகிறது. நம்மூரில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை, இல்லை என்றால் தூக்குத் தண்டனை...
வரவிருக்கும் ஜனவரி 2023ல் சென்னைப் புத்தகக் காட்சி, சர்வதேசப் புத்தகக் காட்சியாக நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். சர்வதேசப் புத்தகக் காட்சி என்றால் என்ன..? அது எப்படியிருக்கும்..? இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஷார்ஜா புத்தகக் காட்சிக்கு ஒரு விசிட் அடித்துத் தெரிந்து கொள்ளலாம். ஷார்ஜா...