Home » Archives for நஸீமா ரஸாக்

Author - நஸீமா ரஸாக்

Avatar photo

உணவு

பட்சணங்களில் நான் பக்கலவாவாக இருக்கிறேன்!

பொதுவாகச் சுற்றுலா சென்றோமென்றால் பின்னாளில் நினைத்து மகிழ ஆயிரம் நினைவுகள் சேகரமாகும். எனக்கு துருக்கிப் பயணம் அப்படித்தான் அமைந்தது. நகரத்தின் பழமை கண்களுக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் டமாஸ்கஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த உதுமானியர்கள்தான் அதற்குக் காரணம்...

Read More
உலகம்

வீடு கட்டி அடிக்கும் அரசு!

நிறவெறிக்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிற மக்கள் தங்களுக்கான வீடு கேட்டு அரசாங்கத்துக்கு மனுச் செய்து முப்பதாண்டுகள் கடந்தும் இன்னும் கிடைக்கப் பெறாமல் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம்… நிறவெறிச் சட்டம். இதற்கெல்லாம் சட்டமா? ஆம். தென்னாப்பிரிக்கா...

Read More
சுற்றுலா

சுற்றிப் பார், சொக்கிப் போவாய்!

பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை. மீண்டும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன, பாலைவனத் தொங்கும் தோட்டங்கள். ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஏழு எமிரேட்டில் ஷார்ஜா ஒன்று. ஷார்ஜாவிலிருந்து...

Read More
உலகம்

உயிர் இருந்தால் அதிசயம்!

ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’  ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து  மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்...

Read More
சிறுகதை

ஒன்றுமில்லாதது

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்திருந்தது. கொண்டாடிக்கொண்டே இருக்க முடியாது. கண்மூடித் திறப்பதற்குள் பன்னிரண்டாம் வகுப்புக்குப் போய்விட வேண்டியிருக்கும். சீருடை அணிந்து தயாரானாள் திவ்யா. கண்களில் மை சற்றுக் கூடுதல்தான். ஜடை போட வேண்டும் என்ற கட்டாயம் அவள் பள்ளியில் இல்லை என்பதால் குதிரைவால் போட்டுக்...

Read More
உலகம்

பாகிஸ்தானில் ஒரு பொம்மலாட்டத் திருவிழா

ஒரு தேர்தல் எப்படி நடக்கக் கூடாதோ, கன கச்சிதமாக அப்படியே பாகிஸ்தானில் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 அன்று தேர்தல். அதற்கு முதல் நாள் இரண்டு இடங்களில் கலவரம். சுமார ஐம்பது பேர் உயிரிழந்தார்கள். எனவே நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லட்சக் கணக்கான இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்...

Read More
உலகம்

இம்ரான் கானுக்கொரு யார்க்கர்

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு...

Read More
உலகம்

பலூசிஸ்தான் என்னும் பாவப்பட்ட பூமி

கடந்த ஜனவரி பதினெட்டாம் தேதி இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் என்ற செய்தி வந்து, நாமெல்லாம் சிறிது வியப்புடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பொதுவாகப் பாகிஸ்தான் தாக்குவதென்றால் நம் பக்கம்தானே திரும்பும், இதென்ன புதிதாக இரானுடன் மோதுகிறது என்று வியந்தோம். வியப்புக்கு இன்னொரு காரணம், இப்போது...

Read More
ஆண்டறிக்கை

எழுத்து என்கிற நோன்பு

2023, என் வருடம் என்று நிறைவாக என்னால் சொல்ல முடியும். இப்படி நான் திடமாகச் சொல்ல எனக்கு வழிகாட்டிய என் ஆசிரியர் பா ராகவனின் பங்கு அளப்பரியது. 2022-ஆம் ஆண்டு  தளிர், சூஃபி ஆகும் கலை வெளியீடு முடிந்த கையோடு அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டேன் என்றால் நம்புவீர்களா..? 2023-ஆம் ஆண்டுக்காக...

Read More
உலகம்

சாலையெங்கும் ஆரஞ்சு!

துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க முடியாது. பதினான்கு வழிச் சாலையில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். ஆனால் சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தச் சாலையில் ஆரஞ்சு நிறத்தில் மக்கள் வெள்ளம்போல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!